சசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…! இல்ல…. முதல்வா் ஓ.பி.எஸ்..!!!

சசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…! இல்ல நானே வெளியேற்றுவேன்..!! அதிரடி முதல்வா் ஓ.பி.எஸ்..!!!

சந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதா வசம் அந்த வீடு வந்தது. ஜெயலலிதா அரசியலுக்கு நுழைந்தபின், அதிகாரத்தின் சின்னமாகவே அந்த வீடு மாறிப் போனது.
இப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் பீடத்தில்தான் சசிகலா தற்போது இருந்து வருகிறார்.
இடைத்தேர்தலில் பொதுச் செயலாளரின் சார்பில் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகை வைக்கப்பட்டே படிவம் பூர்த்தி செய்யப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு விரிவான உயில் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் இல்லை. நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில், அந்த சொத்துக்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபாவையே சேரும் என்றும் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதாவின் தோழி என்ற அந்தஸ்தில் சசிகலா அந்த வீட்டில் குடியிருக்க முடியாது.
தீபக் தற்போது சசியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவரின் அனுமதியை மட்டும் பெற்றால் போதுமா என்றால் அது போதாது.
பாகப்பிரிவினை செய்யப்பட்டால்தான் எந்த பகுதி தீபாவுக்கும், எந்த பகுதி தீபக்குக்கும் என்பது தெரியும்.
அது முடிவாகாத வரையில், இருவரில் ஒருவரின் அனுமதி இருந்தாலும் கூட சசிகலா வீட்டை காலி செய்யும் நிலை வரும்.
மத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு அதிரடிகளை தொடா்கிறது. அதில் ஒன்றுதான் சசிகலாவை போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றும் திட்டம்.
சட்ட பிரச்சனைகளை காரணம் காட்டி, தீபா மூலம் சசிகலாவை கார்டனில் இருந்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மறைமுகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில் தமிழகத்தில் தொடா் அதிரடிகளை செய்து முதலமைச்சா் பன்னீா் செல்வத்தின் வழியாகவே,
சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு அனுப்பவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாக பேசப்பட்டு வருகிறது. இதிலிருந்து முதலைமச்சர் சக்திமிக்க முதல்வர் என்பதும் இங்கு நிரூபிக்கப்பட்டு வருகிறது.

todayindian.info

Leave a Reply