சசியின் கன்னிபேச்சு உருவான விதம்…

அதிமுக பொதுச் செயலாளராக சனிக்கிழமை பொறுப்பேற்ற வி.கே.சசிகலா கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

அவரது முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் நிலையில் உரையை, நடராசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார் என்பது வரை குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கார்டனில் சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசிப்பார்த்துள்ளார். பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தான் சொல்லிக்கொடுத்துள்ளார்.

உரை விஷயத்தில் திருப்தி அடைந்த பிறகு உடை விஷயத்தில் கவனம் செலுத்தி உள்ளனர். எப்போதும் சாதாரண உடை அணியும் சசிகலா பதவி வரப்போகிறது என்றதும் உடை, வாட்ச் அனைத்தையும் பார்த்து பார்த்து தெரிவு செய்திருக்கிறார். அவற்றை தினகரனின் மனைவி பார்த்துக்கொண்டாராம்.

ஜெயலலிதாவை போல் கடைசியில் சொல்ல குட்டிக்கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்தாகவும், ஆனால் கடைசியில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார் என்றும் கார்டன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Reply