சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா திட்டி பேசியவை..

சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு நடந்த 2011 பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா திட்டி பேசியதாவது.

‘‘அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர். ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர். தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது. ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம். எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம’ என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ என முழுங்கினார் ஜெயலலிதா.

இதெல்லாம் மூன்று மாதங்கள்தான் ‘‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாவை திரும்ப சேர்த்துக் கொண்டார். ஆனால் அவர் உறவுகளை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீதான நடவடிகை தொடரும் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா

‘‘அரசியல் ஆசை இல்லை’’ என்று சொன்ன சசிகலாதான் இப்போது பொதுச் செயலாளர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள்தான் சசிகலாவை சுற்றி இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply