கொன்றை

மிளிரும் கொன்றை
கோடையின் கொடுமை பற்றிப் புலம்பிக்கொண்டேயிருப்பவர்களுக்கு, அப்பருவத்தில் தோன்றும் உன்னத அம்சங்கள் கண்ணில் படுவதில்லை. சுவையான மாம்பழமும் நுங்கும் வருவது கோடையில்தான். சித்திரை மாத நிலவு தோன்றி ஜொலிப்பதும் கோடையில்தான். மல்லிகையின் மலர்வு உச்சத்தை அடைவதும் சரக்கொன்றை மரம் இலைகளை முழுவதுமாக உதிர்த்து, ஒரு பெரிய பொன்னிறப் பூச்செண்டு போலப் பூத்துக் குலுங்குவதும் இந்தக் காலத்தில்தான்.

சிவன் தனது தலைமுடியில் கொன்றை மலரைச் சூடியிருப்பார். ‘மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே…’ என்ற வரிகள் இதை உணர்த்தும். முதுமலைக் காட்டில் ஒரு கொன்றை மரத்தடியில் சிறியதொரு கோயில் போல நடுகல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருவர் லிங்க பூஜை செய்வது புடைப்புச் சிற்பமாகச் சித்தரிக்கப்பட்டிருந்த்து.
. வீடு கட்டத் தொடங்கும்பொழுதே இந்த மரக்கன்றுகளை நட்டுவிட வேண்டும். அது நம் புறவுலகின் எழிலைப் பன்மடங்கு கூட்டக்கூடும்.

இம்மர நாற்றங்கால்களை வளர்க்க விதைகளைக் கொடுத்த என் நண்பர் ஒருவர், அவை கெட்டியான மேல்தோலால் மூடப்பட்டிருப்பதால், 24 மணி நேரம் ஊறவைத்த பின்னர்தான் ஊன்ற வேண்டும் என்றார். காட்டில் இம்மரத்தின் இனிப்பான பழங்களை நரி, காட்டுப்பன்றி, குரங்கு போன்ற காட்டுயிர்கள் உண்டு, எச்சத்துடன் தரையில் போடும் விதைகளே நன்றாக முளைக்கின்றன. பல தாவரங்களின் விதைகள் ஒரு காட்டுயிரின் உணவுப்பாதை வழியே சென்றால்தான் முளைக்க முடியும். இயற்கையின் வியப்பூட்டும் நுண்ணிய பிணைப்புகள் பலவற்றில் இதுவும் ஒன்று.
கொன்றை மரத்தின் பட்டை சாயத் தொழிலுக்கு மட்டுமன்றி, நாட்டு வைத்தியத்திலும், தோல் நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. முதிர்ந்த கொன்றை மரத்தைக்கொண்டுதான் உலக்கை செய்யப்படுகின்றது. காடுகள் பரந்திருந்த அந்தக் காலத்தில் கொன்றை மரங்களும் வேண்டுமளவு இருந்திருக்கும். இன்று உலக்கை ஒன்றைப் பார்க்க வேண்டுமானால், தட்சிணசித்ரா போன்ற அருங்காட்சியகத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
மேலும்
19/08/2014 • by Info • in மூலிகைகள்
மூலிகையின் பெயர் -கொன்றை
தாவரப்பெயர் – CASSIA FISTULA
தாவரக்குடும்பம் – CAESALPINIACEAE.
வகைகள் – புலிநகக்கொன்றை, மயில்க்கொன்றை, சரக்கொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, சிறுகொன்றை, மந்தாரக் கொன்றை மற்றும் முட்கொன்றை.
வேறு பெயர்கள்- பெருங்கொன்றை,சிறுகொன்றை.
பயன்தரும் பாகங்கள் – பட்டை, வேர், பூ, மற்றும் காய்.
வளரியல்பு – கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும் ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு சிகப்பு நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவரம்பூவின் வடிவத்திலிருக்கும். இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பூவின் நடுவில் 5-6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உருளை வடிவக் காய்களையும், உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.

Leave a Reply