கொண்டைக்கடலை சுண்டல்

இலகுவாக செய்யக்கூடிய சுவையான கொண்டைக்கடலை சுண்டல்
*  கொண்டைக் கடலை — 1 கப் (இரவே ஊற வைக்கவும்)

* சின்ன வெங்காயம் — 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்)

* சிவப்பு மிளகாய் — 3 என்னம்

* கறிவேப்பிலை — 1 இனுக்கு

* கடுகு, உளுத்தம் பருப்பு — 1 டீஸ்பூன்

* தேங்காய் துருவல் — 3 டீஸ்பூன்

* உப்பு — ருசிக்கேற்ப
* முதலில் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

* பின் எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.

* அதனுடன் வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி வத்தலை போடவும் .

* பின் வேகவைத்த கொண்டைக்கடலையை போட்டு மீண்டும் நன்கு வதக்கவும்.

* பின் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி பறிமாறலாம்.

* சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

Leave a Reply