கைக்குத்தல் அரிசி

அவ்வளவும் சத்து: கைக்குத்தல் அரிசி

#doctorvikatan
தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகளில் கைக்குத்தல் அரிசியும் ஒன்று. ஆனால், இன்றைக்குப் பலருக்கு இப்படி ஓர் அரிசி  இருப்பதே தெரியாது.
முட்டைக்கோஸுக்கு இலையில் சத்து, வெண்டைக்காயில் விதையில் சத்து என்பதைப் போல, அரிசிக்கு உமியில் சத்து. கைகளால் குத்தி உமி நீக்கப்படுவதால், அரிசியின் முழுமையான பலன் இதில் கிடைக்கும்.
இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையே வராது. தினமும் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம்.
உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள், வளரும் குழந்தைகள், வயதானவர்கள், விளையாட்டு வீரர்கள் வெள்ளை அரிசிக்குப் பதிலாக, கைக்குத்தல் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
கைக்குத்தல் அரிசியில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்துள்ளன.

Leave a Reply