கூவிக்கிட்டு இருக்கீங்களே

அந்தப் பொண்ண வெட்டிட்டு ஓடுற வரைக்கும் யாரும் தடுக்கல யாரும் தடுக்கலன்னே கூவிக்கிட்டு இருக்கீங்களே, நம்ம ஊர்லயாவது பரவாயில்ல, சும்மா ஒதுங்கித்தான் போனாய்ங்க.. 4 நாளைக்கு முன்னாடி கர்னாடக மாநிலத்தின் ஹசன் அப்படிங்கிற ஊர்ல, பஸ் ஸ்டாண்ட்க்கு வெளிய 18 வயது இளைஞர்கள் இருவர் மாறி மாறி கத்தியால குத்திக்கிட்டு சினிமால வர மாதிரி உருண்டு புரண்டு அடிச்சிக்கிட்டு இருந்திருக்காய்ங்க.. அப்ப அந்த ஊர் குடிமக்கள் எல்லாம் அதை ரொம்ப சுவாரசியமாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும், வாட்ஸ் அப்பில் முதல் ஆளாகப் பகிர்வதற்காகத் தங்கள் செல்ஃபோனில் ஜாலியாக வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்…

இந்தக் கண்றாவிக்கு நம்ம ஊர் எவ்வளவோ பரவாயில்லை.. ஃபோட்டோ வீடியோலாம் எடுக்காம கம்முன்னு ஒதுங்கி நின்னுக்கிட்டாய்ங்களே என்று நினைத்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்..

பின்ன என்னய்யா? சின்ன வயசுல இருந்தே “எந்த வம்பு தும்புக்கும் போயிராதப்பா”, “யார் கூப்டாலும் என்னன்னு கேக்காதப்பா”, “உன் வேலைய மட்டும் பாத்தா போதும்ப்பா”, “நம்ம சொந்தக்காரன்ல இருந்து பக்கத்து வீட்டுக்காரன், போலீஸ், அரசியல்வாதின்னு இந்த உலகத்துல எல்லாருமே கெட்டவன்ப்பா”ன்னு சொல்லிச் சொல்லி பிள்ளைய வளத்துக்கிட்டு இருக்கீங்க.. அப்படி வளருற பிள்ளை இப்படித்தான் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு ‘எனக்கென்ன’ என நிற்கும்..

என் வேலை, என் சம்பளம், என் வீடு என்று மட்டும் மாறிவிட்ட முந்தைய தலைமுறையும், ”உன் வேலை, உன் சம்பளம், உன் வீடு என்று மட்டும் இரு” என்று அது சொல்லிச் சொல்லி வளர்த்த இன்றைய தலைமுறையும் இருக்கும் உலகில் இப்படித்தான் நடக்கும்.. மிக முக்கியமாக நகர்ப்புறங்களிலும் மத்திய வர்க்கத்திலும் இந்த எண்ணம் தான் இருக்கிறது.. யோசித்துப் பாருங்கள், சாலையில் நீங்கள் வண்டியில் இருந்து கீழே விழுந்தால் உங்களைக் காப்பாற்றுபவன் பெரும்பாலும் சிட்டி ஆளாக, மேல் தட்டு ஆளாக, 40 வயதிற்கு உட்பட்டவனாக இருக்க மாட்டான்..

சுயநலத்தோடு வாழ்வது தான் சேஃப் என ஒரு தலைமுறையையே நீங்கள் வளர்த்துவிட்டு இப்போது வந்து “ஒருத்தனும் காப்பாத்தல, ஒருத்தனும் காப்பதல”ன்னு கூப்பாடு போட்டால் என்ன அர்த்தம்? ஒருத்தனும் காப்பாத்த மாட்டான்.. அவனவனுக்கு என்று இதே கஷ்டம் வரும் போது எதிர்த்துச் சண்டையிடவும் மாட்டான்.. மிக சாஷ்டாங்கமாக கழுத்தறுபட்டோ, தலை வெட்டப்பட்டோ செத்துப்போகத்தான் செய்வான்.. அப்போதும் அவனைக் காப்பாற்ற எவனும் வர மாட்டான்.. இது தான் இந்தப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், சக மனிதனைப் போட்டியாளனாகப் பார்த்தே வாழ்வதற்கும் நாம் கொடுக்கும் விலை..

@Ram Kumar

Leave a Reply