குறள் 7 – கடவுள் வாழ்த்து, அறத்துப்பால் – தனக்குஉவமை

குறள் – 7 :

தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
குறள்7Translation:

Unless His foot, ‘to Whom none can compare,gain, ‘This hard for mind to find relief from anxious pain.

Explanation:

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

பொருள் :

தனக்கு உவமை இல்லாத இறைவனின் திருவடிகளை நினைக்கின்றவர்களை தவிர, மற்றவர் மனக்கவலைகள் மாற்ற இயலாது.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

விளக்கம் :

இறைவனுக்கு நிகரான வேறு ஒருவரை எவரேனும் சொல்ல இயலாது. எல்லாமும் அவனே, உயிருள்ள பொருளும் அவனே உயிரில்லா பொருளும் அவனே.  மனிதரும் அவனே, மிருகமும் அவனே, மரம் செடி கொடியும் அவனே. அதானால் தான் முண்டாசு கவிஞன் பாரதி இறைவனை

ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
        என்றுந் திகழும், குன்றா வொளியே 
என்று கூறுகிறான்.

ஒரு முறை காஞ்சி மகான் தனது உபன்யாசத்தில் இறைவனின் பெருமைகளை  எடுத்துரைக்கும்பொழுது “பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்திற்கும் காராணம் ஒரே ஒரு பராசக்தி தான். அந்த ஒரே ஒரு சக்தியின் அடிப்படையில் தான் உலகமே இயங்குகிறது. பல விஷயங்களை சம்பந்த படுத்துகிறான் இறைவன். எந்த ஒரு காரியமும் சம்பந்தம் இல்லாமல் நடப்பதில்லை. நமக்கு சம்பந்தம் இல்லாமல் தோன்றும் பல விஷயங்களும் கூட அவனுடைய சக்தியாலேயே நடக்கிறது. அப்படிப்பட்ட சர்வ வல்லமை படைத்த இறைவனை எந்நேரமும் நினைத்து பக்தி செய்து வந்தோமானால், துன்பம் என்பது ஒரு போதும் இல்லை” என்று கூறுகிறார்

இறைவனை விட நான் மேலானவன் என்று நினைத்த ஹிரண்யகசிபு, இராவணன், கம்சன் என்ற பல தீய சக்திகளின்  கதைகளை நாம் கேட்டுள்ளோம். அதிலும் ப்ரஹலாதன் – ஹிரண்யகசிபுவின் கதை மிக அருமையான உதாரணம். தானே இறைவன் என்று இறுமாப்புடன் அலைந்தவன் ஹிரண்யகசிபு. அவனுடைய ஒரே மகன் ப்ரஹலாதன், நாராயணனே அனைத்திருக்கும் ஆதாரம் என்று தீரா பக்தியுடன் வளர்ந்துவரும் தெய்வ அருள் பெற்ற குழந்தை.  தான் என்ற செருக்கின் மிகுதியினால் பெற்ற பிள்ளையையே கொல்ல துணிந்தான் ஹிரண்யகசிபு. ஓம் நமோ நாராயணா என்ற ஒற்றை மந்திரம் தவிர வேறு வார்த்தையே தெரியாத அந்த குழந்தையின் பக்தியில் உருகி இறைவன் பிரஹலாதனை அனைத்து அபாயங்களில் இருந்தும் காக்கிறான். முடிவில் ஹிரண்யகசிபுவை  வதமும் செய்கிறான்.

இறைவன் மீது கொண்ட பக்தியால் பிரஹலாதன் ஒன்றன் பின் ஒன்றாக வரும் துன்பங்களிலிருந்து வெகு சுலபமாக மீண்டு வந்தான். அதுவே, தான் இறைவனை விட உயர்ந்தவன் என்ற மமதையால் ஹிரண்யகசிபு செய்வதறியாது தவித்தான்.

லிங்கோத்பவராக பூமிக்கும் வானுக்கும்  அப்பால் ஒளி வடிவமாக நின்ற ஈசனும், நிகரில்லாதவன்  என்றே பெயர் கொண்டு கோவிலில் அமர்ந்திருக்கும் ஒப்பிலியப்பனும் இதற்கு சான்று என்றே சொல்லலாம். இதே போல் அணைத்து மதங்களும் தன் இறைவனை தன்னிகரில்லதவன் என்றே குறிக்கின்றன.

இப்படிப்பட்ட தன்னிகரில்லாத இறைவனின் திருவடியை பற்றி பக்தியுடன் வாழ்பவருக்கு இன்பத்திற்கு குறைவே இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

உண்மை பக்தி செய்வோம், இன்பமுற வாழ்வோம் 🙂

Leave a Reply