குடி நீர் – தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்கள்

1. தண்ணீர் குடிக்கும்போது உட்கார்ந்து குடிக்க வேண்டும் . ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது தண்ணீர் வயிற்றுக்கு அதி வேகமாக செல்லும் . அதனால் ஹெர்னியா ஏற்படும் (குடலிறக்கம்).

2. தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பரு நீங்கும், முகம் பளபளக்க செய்யும்.

3. தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக் கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும்போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்து விடுகிறது. அதன் குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும், மேலும் கோடையில் இரவில் தண்ணீரைக் குடித்தால், நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலையும் மாலையில் மனச்சிக்கலையும் தீர்க்கும்.

பெரிய ‘கலந்தாய்வு கூட்டம்‘ நடக்கும் போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம், அது மனப்பதற்றத்தைக் குறைக்கும் என்பதனால். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன.

தண்ணீரில் இருப்பவை : ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்புகள்
இப்படிபட்ட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்சேர்ப்போம்

Leave a Reply