குடியரசு தினத்தில் முதல்முறையாக கொடியேற்றும் முதலமைச்சர்

நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றுவார்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பதால் நாளை குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றுவார்‌ எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதல் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் கொடியேற்ற வேண்டியிருப்பதால் தமிழகத்தில் முதன்முறையாக குடியரசு தினத்தன்று ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் கொடியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்ச‌ராக பதவியேற்ற பிறகு தேசியக் கொடியேற்றுவதும் இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply