குங்கிலியம் – Sal (also Shala) (Shorea robusta roxb) tree

 

குங்கிலியம் (Shorea robusta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது இந்தியாவின் கிழக்குப்பகுதி, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது மிதமாக அல்லது மெதுவாக வளரும் மரம் ஆகும். இது 30இல் இருந்து 35 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் 10 – 25 செ. மீ நீளமும் 5 – 15 செ. மீ அகலமும் கொண்டவை.

பயன்கள்

இது உறுதியாக இருப்பதால் வீட்டு மரச்சாமான்கள் செய்ய உதவுகின்றன.

மருத்துவ குணங்கள்

மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்.

– Wiki

குங்கிலிய பூக்கள், சிவனுக்கு மிகவும் பிடித்த பூஜை பூவாக ஹிந்துகளால் கருதப்படுகிறது. அதனால், சிவனுக்கு உகந்த இந்த குங்கிலியம் மர பூக்கள், சிவன் பண்டிகைகளில் முக்கியமான சிவராத்திரி வரும் மாதத்தில் மட்டுமே பூத்து குலுங்குவது விஷேசம்.

இந்த மரங்கள் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.

தீப்பட்ட புண்ணுக்கு…

1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.
2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.
3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.
4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).

குங்கிலியம் என்பது மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரம். இது தெற்கு ஆசியாவைத்
தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது இந்தியாவின் கிழக்குப்பகுதி நேபாளம் ஆகிய இடங்களில் மிதமாக அல்லது மெதுவாக வளரும் மரம். இமயமலைப்பகுதிகளிலும், பஞ்சாப், பீகார், மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளும் குங்கிலியம் மரம் அதிகமாக காணப்படுகிறது.

வட மாநிலங்களில், தேக்கு மரத்துக்கு இணையான சால் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. சால் மரத்தின் மற்றொரு வகை ஜலரி மரம். சால் மரங்கள் அதிக உயரம் வளரக் கூடியவை. ஜலரி மரங்கள் மூன்று மீட்டர் வளரும் தன்மை கொண்டவை.ஜலரி மரங்கள், வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவராத்திரியில் மட்டும் அபூர்வமாக பூ பூக்கிறது. சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.மலை கிராம மக்கள், ஜலரி மர பூக்களை சிவனுக்கு மாலையாக படைக்கின்றனர். தெய்வத் தன்மை கொண்டதாக கருதப்படுவதால், வீட்டு உபயோகத்துக்கும், விறகாகவும் பயன்படுத்துவதில்லை.

வயிற்றுப்போக்கு கட்டுப்படும்

இந்த மரத்தின் தண்டுப்பட்டை மருத்துவ குணம் கொண்டது. தண்டில் இருந்து கிடைக்கும் பிசின் துவர்ப்புள்ளது. வயிற்றுப் போக்கையும் சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.

இளநீரில் காய்ச்சி வடித்த குங்கிலிய பஸ்பத்தை சாப்பிட வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, சிறுநீர் நாள ரணம் போன்றவை குணமாகும்.

குங்கிலிய வெண்ணெயை கொட்டைபாக்களவு வீதம் தினம் இருவேளையாக அருந்திவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, எரிச்சல், பிரமேகம் முதலியன குணமாகும். எலும்புறுக்கி நோயை கட்டுப்படுத்தும்.

நறுமணம் தரும் குங்கிலியம்

குங்கிலியம் பிசினில் இருந்து மூலிகை மருந்துகள், வாசனை திரவியம், கிருமி நாசினி தயாரிக்கப்படுகின்றன. மரத்தின் பிசின் துவர்ப்பி, சிறுநீர் பெருக்கி, ஊக்கமளிக்கும், கப நிவாரணி. முறிந்த எலும்பை ஒட்ட வைக்கும். விந்துவை வளர்த்தல், கபம், வாதம், நீரிழிவு நோய்களுக்கு நிவாரணம் தருகிறது. கொழுப்பை குறைக்கிறது. ரத்த மூலத்தை குணப்படுத்தும்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குங்கிலியம் ஜலரி மரங்கள் காணப்பட்டாலும், தளி வனப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.ஜலரி மரங்கள் இருக்கும் இடத்தில் மூன்று கி.மீ., சுற்று வட்டாரத்தில் நறுமணம் வீசுகிறது. இந்த மணத்தை நுகர, பாம்புகள் அதிகளவில் படையெடுக்கின்றன

– chenaitamilulaa

Leave a Reply