கிராம்பு

மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு

சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட் களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது. இதில் யூனினால், பைனின், வேனலின் போன்ற  ஆவி யாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன. இது பலதரப்பட்ட நோய்களை குணப் படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது. ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசீடனல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினைப் போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு,இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல்ஸ், ஹைட்ரோ குளோரிக் அமிலச்சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், நயாசின், வைட்ட மின் ” சி” மற்றும் ” ஏ” போன்றவை உள்ளன.

பல் வலி போக்கும் உடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப் படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும். மகப்பேறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும், சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி மற்றும் சொத்தைப் பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்திவர வாய்நாற்றம், ஈறு வீக்கம், பல் வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெய்யை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் அடையும்.

உடல் வலி நீங்கும்

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக் கோளாறுகள் நீக்குகின்றன. அஜீரணம் வாயுத்தொல்லை, வாந்தி, இருமல், அடிவயிற்று வலி, தொண்டைக்கம்மல், மூக்கு ஒழுகல், தலைவலி ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு எண்ணெய் மேல் பூச்சாக இடுப்பு வலி, மூட்டு வலி, மற்றும் தொடை, நரம்பு வலி ஆகியவற்றிக்கு நல்ல பலன் தருகிறது. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெய்யைத் தடவி வர குணமாகும்.

தொண்டை எரிச்சல் நீங்கும்

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சேர்த்து சாப்பிட தொண்டை எரிச்சல் கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத்தவிர்க்க சுட்ட கிராம்பு மிகச்சிறந்தது. ஆஸ்துமா கட்டுப்படும்
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச்சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும்

சுவாசக் குழல் சுழற்சி சரியாகும்,. முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தின் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். சமையலுக்கும், கறிகளுக்கும் சுவை யூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம், வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


உயரம் அதிகமான பெண்களை புற்று நோய் தாக்கும்

புற்று நோய்கள் குறித்து பல விதமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள யெசீவா பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் மருந்தியல் துறை நிபுணர் ஜியோப்பிரி சி கபாட் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

மாத விலக்கு நிறைவு பெற்ற 20,928 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் அதிக உயரமுள்ள பெண்களுக்கு புற்றுநோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களுக்கு மார்பக புற்று நோய், குடல் புற்று நோய், மற்றும் தோல் புற்று நோய் போன்றவை இருந்தன. பொதுவாக புற்று நோய்கள் ஹார்மோன்களால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதனுடன் மனிதர்களின் உயரமும் சேர்ந்து புற்றுநோய் ஏற்பட வழி வகுப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதில் உயரமான ஆண்களை விட பெண்களையே புற்று நோய் அதிக அளவில் தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
அதற்கான காரணம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அதிக உயரமுள்ள வர்களின் உடல் பாகங்களும் பெரியதாக உள்ளன. எனவே, அதில் உள்ள அதிக அளவிலான செல்களில் புற்று நோய் மிக விரைவில் பரவுவதாக கூறுகின்றனர்.

Leave a Reply