கலப்பின மாடுகள் படும் துயரம்- மரண வேதனை

நேற்று அலங்காநல்லூரில் இருந்து கிராமத்தான் கேக்குறான்..!!

ஜெர்சி பசு, கலப்பினம் செய்யப்பட்ட வெளிநாட்டு மாடுகளையெல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வருதுடா நாயே..!
பால் பெருக்கத்திற்காக ஊசியப்போட்டு 50 லிட்டர், அறுபது லிட்டர் பாலை தூக்கமுடியாம, மடு பெருத்து அந்த மாடு படுக்கவும் முடியாம, நடக்கவும் முடியாம சாகுற வரைக்கும் துடிதுடித்து வாழுது.
ஒரு மாடு சிரமம் இல்லாம எத்தனை லிட்டர் பாலை மடுவுல சுமக்க முடியும்னு பீட்டாகாரனுக்கு தெரியுமா? 12 லிட்டர் தான் அதிகபட்சம்.
அதுக்கு மேல இருந்தா மாட்டோட மடு அளவை பார்த்தே கன்றை அவிழ்த்து விட்டுறுவோம் நாங்க.

அது மட்டுமில்லாமல் மடுவுல மிசினபோட்டு கறக்குறானுங்க.. ரத்தம் வர வர அது உறிஞ்சுது. மிசின் போட்டு கறக்கும்போது அந்த மாடு எவ்வளவு வலியை உணரும்னு பீட்டாகாரனுக்கு தெரியுமா??
நாங்க கையால பால் கறக்கும்போதே, மாடுக்கு சின்ன உறுத்தல்கூட இருக்கக்கூடாதுனு, இரண்டு லிட்டருக்கு ஒரு தடவை எண்ணெயை காம்புல தடவி கறப்போம் டா. அந்த ஜெர்சி மாடுகள்லாம் உங்கள்ட சொல்லுச்சாடா நாங்க சந்தோஷமா இருக்கோம்னு?? அதுக்குலாம் தடை வாங்கிட்டீங்களாடா?

***** மாட்டை பராமரிக்கிறத பற்றி யாருக்குடா சொல்லித்தற்றீங்க?

———————————————————————————————

முன்பு எல்லாம் வியாபார நாணயம் என்று உண்டு. மனிதன் குறுகிய வழியில் / நேரத்தில் அதிக பணம் சம்பாதிப்பதற்காக அதனை முதலில் மீறினான். கலப்படம் என்ற ஒன்று உருவானது. இப்போது விஞ்ஞானத்தின் துணை கொண்டு சக உயிரினங்களை பணத்திற்க்காக வதைக்க ஆரம்பித்து விட்டான். பிராய்லர் கோழி, மரபணு விதை எல்லாம் இந்த ரகம் தான். மும்பையில் மீன் அழுகாமல் இருப்பதற்காக, அதனைப் பிடித்த உடன் பிணங்கள் அழுகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊசியை குறைந்த அளவில் செலுத்துகிறார்கள். இவ்வாறு ஊசி போடுவதால் பெரிய அளவு உடைய, விலை அதிகம் உள்ள மீன்கள், பனிக்கட்டியில் வைக்காமலேயே, அல்லது குளிர் சாதன பதப்படுத்தும் அறை இல்லாமலேயே, நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். இத்தகைய, பால், கோழி, மீன் எல்லாம் உண்பவருக்கு புற்று நோயை உண்டு பண்ணும். ஆனால், இதனை செய்பவர்களுக்கு கண் முன்னால் இருப்பது எல்லாம் பணம், பணம், பணம் மட்டும் தான். பசு என்பது தாய்க்கு நிகரானது. இதனைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது.

— with Bhaarath Gnanasundaram.

Leave a Reply