கருவேல மரம் நமக்கு எதிரி

கருவேல மரம் நமக்கு எதிரி…

அப்படித்தான்…

ஆசிய ,ஆப்ரிக்க நாடுகளை மூலமாக கொண்ட மர இனம் இது..
மரங்கள் என்றாலே மக்களின் நண்பன் என்னும் வார்த்தையை சிதறடிக்கும் மரம் இது…

இது பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நிலத்தடி நீர் இறங்கி போகும்…நீரில் விஷமேறும்..

இம்மரத்தின் நிழலில் கட்டப்படும் மாடுகள் கூட மலடாகிவிடும்….
இம்மரங்களை எந்த ஐந்தறிவு உயிரினங்களும் நாடுவதில்லை..
இம்மரங்கள் ஆக்சிஜனை குறைவாக வெளியிடும்..கார்பண்டாக்சைடை அதிகமாக வெளியிட்டு சுற்று புற சூழலை மாசுபடுத்தும்…

மரங்கள் என்றாலே வெப்பத்தை உறிஞ்சி மழையை உண்டாக்கும் என்பார்கள்..ஆனால் இம்மரமோ நேரெதிர்….இந்த செய்திகள் எல்லாமே விக்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன..இந்தஉண்மைகளை உணர்ந்ததால் கேரளா மாநிலத்திலுள்ள அனைத்து கருவேல மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டன…எனவே வளம் அங்கு பெருகுகிறது ..அமேரிக்கா போன்ற நாடுகளில் இம்மரம் வளர்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது…ஆனால் நாம் அதை கண்டுகொள்வதே இல்லை…ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வறட்சி ஏற்படவும்..நிலத்தடி நீர் கீழிறங்கி போகவும் காலம் காலமாக அங்கு வளர்ந்து வரும் இக்காடுகளே காரணம்…நாட்டின் நலனை விட தனது நலனையே அதிகம் சிந்திக்கும் நாம் இம்மரங்களை வெட்டி விறகாக்கி விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதற்காக விட்டு வைத்துள்ளார்கள்….

மரத்தை வளர்ப்பது நாட்டுக்காற்றும் பணி என்பார்கள்…
ஆனால் இம்மரத்தை வெட்டினாலே அது நாட்டுக்காற்றும் பணியாகும்…

படித்துவிட்டு தயவு செய்து இப்பதிவை பகிரவும்.

Leave a Reply