கருத்தரங்கில் முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா

கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வெளியேறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா டுடே’ குழுமம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில்  துவங்கியது. கருத்தரங்கை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா துவக்கி வைத்தார்; ஜெயலலிதா உருவ படத்தையும் திறந்து வைத்தார்.

 மாநில முதல்வர் பேசும் போது, அவர் சார்ந்த கட்சி பொதுச்செயலர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. அவர், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
விழாவிற்கு வந்தோர், ‘முதல்வர் பேசும் முன் புறப்பட்டிருக்கலாம்; இல்லாவிட்டால் அவர் பேசி முடித்த பின் புறப்பட்டிருக்க வேண்டும். முதல்வர் பேசும் போதே அவர் வெளியேறியது, அநாகரிகமான செயல்’ என்றனர்.

முதல் பேட்டியில் சசிகலா சொதப்பல்
விழாவில் பங்கேற்ற சசிகலா, பேட்டி அளித்தார். அப்போது, ”இந்தியா டுடே கருத்தரங்கு, முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய மொழிகளிலும்; தமிழகத்தில் தமிழ் மொழியிலும், இந்தியா டுடே வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.

தமிழில், ‘இந்தியா டுடே’ பத்திரிகை வெளியாவது நிறுத்தப்பட்டு விட்டது. இது தெரியாமல், சசிகலா முதல் பேட்டியிலேயே சொதப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
– நமது நிருபர் –

Leave a Reply