கருங்காலி

கருங்காலி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் காட்டிக் கொடுக்கும் கயவர்கள், கூட இருந்து குழி பறிப்போர், நம்பிக்கை துரோகிகள் இதெல்லாம் நம் நினைவுக்கு வரும். கருங்காலி என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த ஒரு சிறு ஆய்வு
கருங்காலி என்பது ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படும் ஒரு வகை மரம்.
கருங்காலி மரம்
இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. இது மட்டுமின்றி கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் போன்றவைகளிருத்து மருந்துப் பொருட்களும் தயார் செய்யப் படுகின்றன.

அதெல்லாம் சரிதான். இவ்வளவு சிறப்புமிக்க கருங்காலி எப்படி துரோகிகளுக்கு அடைமொழியானது என்று கேட்கிறீர்களா?
மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கோடரி இருக்கிறதல்லவா? அதன் கைப்பிடி உறுதியாக இருப்பதற்காக பெரும்பாலும் இந்த கருங்காலி மரக் கட்டைதான் பயன்படுத்தப்படுகிறதாம். அதாவது தன் இனத்தை அழிப்பதற்கு தானே காரணமாக அமைகிறதாம் இந்த கருங்காலி. இதனால்தான் துரோகிகளுக்கும் இப்பெயர் கூறும் வழக்கம் வந்ததாம்.

Leave a Reply