கரப்பான் பூச்சி பால்

கரப்பான் பூச்சியை பார்த்தாலே ஒரு அருவருப்பு ஏற்படும். அதிலும் பெண்கள் இந்த பூச்சியை பார்த்தால் அலறியடித்து ஓடுவார்கள்.

ஆனால் இப்போது கரப்பான் பூச்சியில் இருந்து மனிதனுக்கு அதிசக்தி வாய்ந்த ஊட்டச்சத்து உணவு தயாரிக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.

கரப்பான் பூச்சி, தனது குஞ்சிகளுக்கு தேவையான உணவுகளை தனது உடலில் இருந்து உற்பத்தியாகும் ஒரு வகை பால் மூலமாக வழங்குகிறது. அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் இந்த பாலை சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர்.

அதில், கரப்பான் பூச்சி பால் அதிசக்தி வாய்ந்தது. இதை மனிதனுக்கு ஊட்டச்சத்து உணவாக பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

எறுமை மாட்டின் பாலை விட 3 மடங்கு சக்தியும், ஊட்டச்சத்தும் இந்த கரப்பான் பூச்சி பாலில் இருப்பது தெரியவந்துள்ளது.

BY KISUKISU

Leave a Reply