கண்டங்கத்திரி

*கண்டங்கத்திரியின் இலை,காய் மற்றும் வேர் முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன.

*இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும்.

*இதன் காயை உடைத்து விதையை நீக்கிவிட்டு குழம்பு மற்றும் சாம்பார் செய்து சாப்பிடுகின்றனர். இதனால் உடல் அலுப்பும்,இரும்பலும் சமனமாகி விடுகின்றன.

*உடலில் அதிகம் உஷ்ணம் ஏற்படும் போது சில சமயங்களில் சிறுநீர் தாரளமாக இறங்காமல் வலி ஏற்படுவதுண்டு . அந்த சமயங்களில் கண்டங்கத்திரி இலைச் சாற்றோடு தேனை சம்மாய்க் கலந்து (இரண்டும் சேர்ந்து 1/2 அவுன்ஸ்) ஒரு வேளை கொடுக்க நல்ல பலன் அளிக்கும்.

*சாதாரணமாக ஏற்படும் கை கால் வீக்கங்களுக்குக் கண்டங்கத்திரி விதையை நீரில் அரைத்து பற்றுப் போடுவதன் மூலம் குணமைடைகின்றனர்.

*கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும்.

*வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும்.

*பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.

 

Leave a Reply