கடல் பாசி

`கடல் பாசி என்பது இயற்கையின் வரப்பிரசாதம். 500 மில்லி கிராம் கடல் பாசி ஒரு கிலோ காய்கறிக்கு சமம். கடல் பாசியினை மாத்திரையாக 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு கிராம் கொண்ட இரண்டு மாத்திரையும், சிறியவர்கள் அரை கிராம் கொண்ட ஒரு மாத்திரையும் சாப்பிடலாம். புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டு வலி, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை தடுக்கப்படும். கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. இந்தியாவிலும் மாத்திரை தயாரிக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்,. இத்தொழிலில் கூடுதல் வருவாய் கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகில் சுமார் 25 ஆயிரம் வகை பாசிகள் இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகின்றன. ஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துக்கள் அதிகம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. நீரிழிவு நோயாளிகட்குத் தேவையான சக்தியை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க இது உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பாசியில் இருக்கும் கொழுப்பில் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கின்ற “காமலினோளிக்
அமிலம் உள்ளது.
இந்த பாசியில் இருந்து பிஸ்கெட், சாக்லேட், முறுக்கு, சேமியா, அப்பளம், லட்டு, குளிர்பானம் எனப் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்து இயற்கை உணவகங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(திருச்சியில் நடைபெற்ற இயற்கை உணவு தயாரிப்பு
மதிப்புக்கூட்டல் நிகழ்ச்சியின் கருத்தரங்கில் கேட்டது)

Leave a Reply