ஓஷோ

“குருவே…. நான் சிறிது திராட்சை சாப்பிட்டால் தர்மம் தவறியவனாவேனா?…”
“இல்லை!”
“சிறிது பார்லி சாப்பிட்டால்?…”
“நிச்சயமாகக் கிடையாது!”
“பிறகு ஏன் இவற்றால் தயாரான மதுவை மட்டும் குடிக்கக்கூடாது குருவே?….”
“சிஷ்யா!…  நான் உனது தலைமீது தண்ணீர் ஊற்றினால் இறந்துவிடுவாயா?…”
“இல்லை குருவே…”
“சிறிது மண்ணை அள்ளிப் போட்டால்?”
“ஒன்றும் ஆகாது குருவே!”
“இப்போது இரண்டையும் கலந்து, பிறகு சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் எறிந்தால்?”
“மண்டை பிளந்துவிடும் குருவே!”
“பிறகென்ன? உன் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதல்லவா?!….. ஓடிவிடு”
– நன்றி: ஓஷோ

Leave a Reply