ஓடை

ஓடை என்ற ஒரு இடம் இருந்த அடையாளமே, கிராமங்களில் இல்லாமல் போகும் அபாய நிலை, இப்போது ஏற்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.

ரோட்டோரம் இரண்டு பக்கமும் வயல் அல்லது கரிசல்காடுகள் இருக்கும். இதற்கிடையில் முன்பு பெரிய ஓடை இருந்தது, ஒரு பெரிய யானை உள்ளே இருந்தாலும் தெரியாது, அந்த அளவு பெரியது. மரம், செடி, கொடி படர்ந்து இருந்தது.
மழை காலத்தில் அதிகமாக மழை பெய்யும் சமயம் உபரிநீர் எல்லாம் காட்டில் இருந்து வடிந்து ஓடையில் விழும். சிறிய ஓடையில் ஆரம்பித்து, பெறிய ஓடையில் கலந்து கண்மாய்க்கு வந்து சேரும். ஓடையில் தேங்கியிருக்கும் நீரில் மீன்கள் இருக்கும் மீன்களை பிடித்து வீட்டுக்கு எடுத்துச் செல்வோம், சில நேரங்களில் அங்கே மீனைச் சுட்டுச் சாப்பிடுவேம். மீன் மட்டுமல்ல குருவி, சில நேரங்களில் முயல் கூட சிக்கும், கொக்குக்கு கண்ணி வைத்து பிடிபோம், கிடைத்தால் சுட்டுச் சாப்பிடுவோம். தேன் எடுப்போம், இவ்வளவு பெருமை உள்ள ஓடை இப்போது இல்லை.

ஆனால் இப்போ சிறிய ஓடைகள் இருந்த சுவடே இல்லை, பெறிய ஓடைகள் சின்ன வாய்கால்களாக இருக்கிறது. அதில் இருந்த மரம், செடி, கொடிகள் எங்கு போனது என்று தெரியவில்லை.இப்படி வடிகால் இல்லாமல் போனதே, மழைகாலத்தில் மழை நீர் தேங்கி பயிர்கள் நாசமாகிண்றன. கண்மாக்கு தண்ணீர் சரிவர வந்து சேரமல் தண்ணீர் வீனாகிறது.
ஓடையில் இருந்த காட்டு சின்ன விலங்கு நரி, முயல், மறறும் பறவை இருக்க இடமில்லாமல் அழிவின் விளிம்பிற்கு செனறு விட்டது. இதைவிட மழைகாலத்தில் மலையில் இருந்து, கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஆறு பல நூறு அடிகளாக இருந்தது, சில அடிகளாக மாறிவிட்டது. இதில் மணல்களை அள்ளி நீர் வரும் போக்கையே மாற்றிவிட்டார்கள். இது எங்கள் கிராம் மட்டும்மல்ல, எல்லா தமிழகக் கிராமங்கள் நிலையும் இதுவாகத்தான் இருக்கும்.

Leave a Reply