ஒரு கட்டிங்

​சுந்தரத்திற்கு கைகள் கிடுகிடுவென ஆடின.

அவன் எவ்வளவோ கட்டுப்படுத்திப் பார்த்தும்

பயன் இல்லை.

ஒரு கட்டிங்காவது போட்டால்தான் அடங்கும் என

நினைத்தான்.

காலையிலிருருந்து அலைகிறான்.

ஒரு இடத்தில் கூட அவனுக்கு மது கிடைக்கவே

இல்லை.

நேற்று வரை ஊற்றிக்கொடுத்த கடைகள் பூட்டப்பட்டு

கிடக்கின்றன.

முதல் நாளே வாங்கி வைத்து விற்கும் கடைகள் கூட

கை விரித்து விட்டன.

இப்படி கைகால்கள் ஆட்டத்தோடு எப்படி அவன் மூட்டை

தூக்கப்போவான்.

என்ன சுந்தரம், வேலைக்குப் போகல? – குரல் கேட்டு

நிமிர்ந்தான் சுந்தரம்

எங்கே…கைகால் எல்லாம் ஆடுது. கட்டிங் போட்டாதான்

சரியாகும். கிடைக்கலயே’ என்றான்.

குவார்ட்டரே தரேன். பிரியாணி இருநூறு ரூபா பணமும்

தர்றேன்! வர்றியா? – கோபால் கேட்க, சுந்தரம் வாயில்

எச்சில் ஊறியது!

“என்ன வேலை?”
டாஸ்மாக் கடை திறக்கறத எதிர்த்துப் போராடப் போறோம்.

குவார்ட்டர் போட்டுக்கிட்டு கிளம்பறியா? கோபால் கேட்க,
சுந்தரம் உற்சாகமாய் எழுந்தான்,

—————————

-ந.சோலையப்பன்

குமுதம்

Leave a Reply