ஒன்று படுவோம்

கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி,

 கில்லெட் ரேசரில் சவரம் செய்து,

ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து ,

ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக் கொண்டு, 

ஜாக்கி ஜட்டியையும் , 

க்ரூசோ பனியனையும்,

பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக் கொண்டு,

மேகி நூடுல்சை சாப்பிட்டு, 

ஆப்பிள் போனை நோண்டிகிட்டு,

நெஸ்கபே காபியை குடித்து விட்டு, ரீபோக் ஷூவை மாட்டிக் கொண்டு,

ரேபான் கண்ணாடியை அணிந்து, வெஸ்டார் வாட்சைக் கட்டிக் கொண்டு,

சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,

ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, 

கொக்கோ கோலா அருந்தி ,

மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,

மாலை வீடு திரும்பும் போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,

குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,

நண்பர்களோடு அமர்ந்து கேட்டான் 
” மாப்பிள்ளை…

காவிரில என்னம்மா பிரச்சனை”.
தன்மானம் வெறும் குரலில் இல்லை என் தமிழா…
அரசு தடுப்பணை கட்டவில்லை என்றால் கக்கி வரும் மண்ணை விற்றுத் தின்னுவதற்காக.
நீ ஆளுக்கு நூறு ரூபாய் போட்டாலே தடுப்பு அணைகள் பல நாமே கட்டி நீரை கடலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தலாமே!.
ஒன்று படுவோம்.

சாகசம் புரிந்து மீண்டும் 

உண்மைத் தமிழனாய் வாழ்வோம்.

இந்தியனாய் மாய்வோம்.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply