ஐரோப்பியர்களின் கோடைகால உடை

ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு நம்ம ஊர் லுங்கிகள் பிரபலமாகி வருகின்றன. வெயிலுக்கு படு வசதியாக லுங்கிகள் இருப்பதாக ஐரோப்பியர்கள் குஷியாக கூறுகின்றனர்

தமிழர்களிடன் தவிர்க்க முடியாத ஒரு உடை லுங்கி எனப்படும் கைலிதான். என்னதான் படு டீக்காக பேன்ட், சட்டை போட்டு ரவுண்ட் அடித்தாலும், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக லுங்கிக்குள் புகாத தமிழர்களே இருக்க முடியாது. பெர்முடாஸ்களின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும் இன்னும் லுங்கிகள் மங்காப் புகழுடன் தமிழர்களைத் தழுவியபடிதான் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்து லுங்கிகள் இப்போது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்துள்ளது. அங்கு கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கட்டம் போட்ட கைலிகள் படு சூடாக விற்பனையாகி வருகிறதாம்.

ஒரே ஒரு தையல், 2 மீட்டர் கட்டம் போட்ட தமிழகத்து லுங்கிகள், ஐரோப்பிய மக்களுக்கு பெரும் ஆச்சரியமாகவும், அது கொடுக்கும் சவுகரியங்கள் படு வியப்பையும் அளிப்பதாக உள்ளதாம். இதனால் லுங்கிகளை வாங்கும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.,

இந்தியாவில் பல காலமாக பிரபமலானவை இந்த லுங்கிகள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இது புதிய உடையாக தெரிகிறது. நம்ம ஊரில் கட்டுவது போலவும் இந்த லுங்கிகளை ஐரோப்பியர்கள் அணிகிறார்கள். அதேசமயம், இதை விதம் விதமான டிசைன்களில் சட்டை போலவும் அணிகிறார்களாம்.அதற்கேற்ற வகையில் விதம் விதமான டிசைன்களில் நம்ம ஊர் லுங்கிகளை மாற்றியமைத்து விற்று வருகிறது ஒரு நிறுவனம்.

இதுகுறித்து கோஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் உமாசங்கர் கூறுகையில்,. பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு நாங்கள் துணிகள் மற்றும் தைக்கப்பட்ட ஜவுளித் தயாரிப்புகளை அனுப்பி வருகிறோம். இந்த முறை எங்களது லுங்கிகளுக்கு நிறைய கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்து லுங்கிகளுக்குத்தான் நல்ல கிராக்கி உள்ளதாம். அதிலும் நீல நிறத்திலான கட்டம் போட்ட லுங்கிகளுக்குத்தான் நல்ல மவுசு உள்ளதாம். மெட்ராஸ் லுங்கியா என்று கேட்டு வாங்குகிறார்களாம் ஐரோப்பியர்கள்.

Leave a Reply