எலும்பொட்டி செடி

எலும்பு முறிவை குணமாக்கும் எலும்பொட்டி செடி

எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெறிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர். இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும்.

இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும். பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும்.

பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும்

இதில் கால்சியம் அதிகமாக இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும்.

மருத்துவப் பயன்கள் :– எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதைக் கண்டறிந்தார்கள். அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில் குணமாவதைக் கண்டறிந்தனர்.

இதனால் இதற்குக் காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து அதன் ‘எக்ஸ்ட்ராக்’ எடுத்து வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள்.

பின் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேராளாவில் முட்டிகுளக்கரையில் செய்து வருகிறார்கள்.

 

4 comments

  1. Dear Sir
    எலும்பு ஒட்டி இலைகளின் பொடி விற்கும் மருத்துவர்கள் அல்லது மருத்துவ கடைகள் மற்றும் விதைகள் கிடைக்கும் இடங்கள் இவைகள் கிடைத்தால் மிக நன்றாக இருக்கும்

    1. கந்தசாமி கோவில் அருகே
      கிடைக்கும். சென்னை பேரிஸ்

  2. சேலத்தில் எங்குகிடைக்கும் எழும்பொட்டி. என் நம்பர்.8248651934

Leave a Reply