எத்தகைய பாத்திரங்களில் உணவு சமைப்பது

• எத்தகைய பாத்திரங்களில் உணவு சமைப்பது ஆரோக்கியமானது, எவையெல்லாம் ஆபத்தானது?’ என்ற கேள்விக்கு, சென்னை, தேனாம் பேட்டையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து மருத்துவர் தாரணி கிருஷ்ணன், விரிவாக பதில் அளித்தார்.

 மண்பாண்டம், மிக நல்லது!
• ‘‘மண்பாண்டம், எவர்சில்வர், இரும்பு, அலுமினியம் என ஒவ்வொரு வகை பாத்திரத்துக்கும் பிரத்யேகத்தன்மை இருக்கிறது. அது எந்தளவுக்கு சமைக்கும் உணவை சிறப்பாக்குகிறது, சீர்குலைக்கிறது என்பதை அறிய வேண்டியது அவசியம்!
• பராமரிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங் களிலேயே சிறந்தது மண் பாண்டங்கள்தான். மண் சட்டிகளில் உள்ள நுண்துளைகள் மூலமாக நீராவியும், காற்றும் ஊடுருவி உணவை சரியான பதத்தில் சமைக்க வைக்கும். மேலும், இதில் சமைத்த உணவு கூடுதல் சுவையுடனும், பல மணி நேரம் கெடாமலும் இருப்பதோடு, அமிலத்தன்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாது. கல்சட்டி போன்ற பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.

• எவர்சில்வர், ஏற்றுக்கொள்ளலாம்!
• மண்பாண்டத்துக்கு அடுத்து எவர்சில்வர் பாத்திரங்கள் உணவு சமைக்கச் சிறந்தவை. எந்த அமில வினைபுரியும் திறனும் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு இல்லாததால் சமைத்த உணவு களை இதில் பல மணி நேரம் வைத் திருக்கலாம். மண் பாத்திரம் மற்றும் எவர்சில்வர் பாத் திரங்களைத் தவிர, மற்ற எந்த பாத்திரங்களில் உணவு சமைத்தாலும் அவற்றை உடனடியாக எவர்சில்வர் பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டியது அவசியம்.

• இரும்புப் பாத்திரம் !
• இரும்புப் பாத்திரங்கள் உணவு சமைக்க ஏற்றவை; சமைத்த உணவில் வெப்பத்தை பல மணிநேரம் சீராகத் தக்க வைக்கும் திறன் கொண்டவை. ஆனால், இதில் சமைத்த உணவை உடனடியாக வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டும்.

• அலுமினியம், அவாய்ட்!
• விலை மலிவு என்ற ஒரே காரணத்துக்காக அலுமினியப் பாத்திரங்களைப் பயன் படுத்துவோர் அதிகம். ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப் புகளும் அதிகம். ‘அல்ஸைமர்’ எனப்படும் மனநலம் சார்ந்த நோய் உள்ளவர்களுக்கு, அலு மினியப் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானது. அலுமினியப் பாத்திரங்களில், புளிப்பு சுவையுடைய உணவு களைச் சமைத்தால் அமிலத் தன்மையுடன் வினைபுரிந்து உணவுப்பொருளில் எளிதில் அலுமினியத் தாது கலந்துவிடக்கூடும் என்பதால், புளிப்புச் சுவை உணவுகள், தயிர் போன்றவை அலுமினியத்துக்கு ஆகாது. கீரைகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆக்ஸலேட் மற்றும் ஃபைடேட் ரசாயனங்கள் எளிதாக உருவாகும் வாய்ப்புஉள்ளது என்பதால், தவிர்க்க வும். காய்கறிகளை மட்டும் அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கலாம்.
• அலுமினியப் பாத்தி ரங்களில் உணவு சமைப்பதால் ஒரு நாளைக்கு 1-2 மி.கி அளவி லான அலுமினிய மெட்டல் உடலில் கலக்க வாய்ப்புள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று, ஒரு நாளுக்கு 50 மி.கி அளவிலான மெட்டல் உணவில் கலக்கலாம், அதை மீறினால் ஆபத்து என்கிறது. ஆனாலும், தொடர் பயன்பாடு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அலுமினியத்தை தவிர்ப்பதே நல்லது.

பீங்கான்… பிரச்னையில்லை!
• `மைக்ரோவேவ் அவன்’ களில் பயன்படுத்தப்படும் பீங்கான் பாத்திரங்களால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், மலிவான பீங்கான் பாத்திரங்கள் உயர்ந்த கொதிநிலையில் தயாரிக்கப்படுவதில்லை என்பதுடன், உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என்பதால், எப்போதும் தரமான பீங்கான் பாத்திரங்களையே பயன்படுத்தவும்.
• எனாமல் பாத்திரங்கள்!
• அலுமினியம் மீது எனா மலைச் சேர்த்து குறைவான விலைக்கு விற்கப்படும் எனாமல் பாத்திரங்களில் சமைக்கும்போது, உணவில் கேடியம் நச்சுத்தன்மை கலக்கும் வாய்ப்
புள்ளது. எனவே வெளிப்புறக் கவசம் உள்ள முட்டையை வேகவைப்பதைத் தவிர, இதை வேறெந்தச் சமையலுக்கும் பயன்படுத்த வேண்டாம். சமைத்த உணவு வகைகளை எடுத்துப் பரிமாற இதைப் பயன்படுத்தலாம்.

வெண்கலம்… உலரவிடவும்!
• வெண்கலப் பாத்திரங்களில் சமைப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், சமைத்த பாத்திரங்களை விரைவாகக் கழுவி நன்கு உலரவைக்காவிட்டால், களிம்புப் படலம் உருவாகி, அடுத்து சமைக்கும்போது உணவை நச்சுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும்.
• பொதுவாக எந்த வகைப் பாத்திரமாக இருந்தாலும், அதில் கீறல், பழுது ஏற்பட்டு விட்டால் உடனடியாக சமைக்கும் உபயோகத்தில் இருந்து அதை நிறுத்திவிட வேண்டும். அதேபோல, எல்லா சமையல் பாத்திரங்களையுமே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிவிடுவது சிறந்தது’’ என்று வலியுறுத்தி முடித்தார் தாரணி.

Leave a Reply