எதிர்கால தேசம் அழுக்கில்லாமல் அழகாக…நம்பிக்கை துளிர்க்கிறது

நம்பிக்கை துளிர்க்கிறது…

ஒரே கோரிக்கை..ஜல்லிக்கட்டை தடுக்காதே..இப்படி
தானாக ஒன்று திரண்டு போராட ஆரம்பித்துள்ளனர் இளைஞர்கள்…ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒரே மையப்புள்ளிக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளனர்..

இதுபோன்ற, ”வன்முறையே இல்லாத ஒன்று திரண்டு பலம் காண்பிக்கும் மனப்பான்மை”யை ஜல்லிக்கட்டு என்ற மண் சார்ந்த விஷயம் உருவாக்கியிருக்கிறது..

யாராக இருந்தாலும், எப்பேர்பட்ட உச்ச அமைப்பாக இருந்தாலும் விபரீதமாக செய்யப்போனால், நாடே ஒன்று திரண்டு எதிர்ப்பு என்கிற அறப்போர் ஆயுதத்தால் திருப்பி அடிக்கும் என்ற பயத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்..

வருங்காலங்களில்,சமூக நலனுக்கு எதிரான ஊழல் உட்பட எந்த விஷயமும், இவர்களிடம் தப்பாது என்கிற நிலைவரும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது..

அணைப்பதற்கு கடுமையாக போராடவேண்டியிருக்கும் காட்டுத்தீ, ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஏற்படுவ தில்லை.. முதலில் ஒரு சிறு தீப்பொறிதான்..ஆனால் அது பரவும் வேகம் இருக்கிறதே..அதேதான் இதுவும்..

இளைய தலைமுறையை போராடவிட்டு பழக்கி னால்தான் அவர்களுக்கான எதிர்கால தேசம் அழுக்கில்லாமல் அழகாக கிடைக்கும்.

Ezhumalai Venkatesan

Leave a Reply