உலக பூமி தினம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பருவநிலை மாறுபாடு காரணமாக, புவி அதிகப்படியாக சூடாகி வருகிறது. இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு, வனவிலங்குகள் அழிந்து வருகின்றன.

அறிவியலின் வளர்ச்சியால், ஆக்கத்தை விட அழிவு தான் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நாளில் புவியைப் பேண நாம் செய்ய வேண்டிய சில செயல்கள் குறித்து இங்கே காணலாம்.

1 – உங்களுக்கு நீங்களே செடி ஒன்றை பரிசளித்து கொள்ளுங்கள். அந்த செடிகள் உங்களைச் சுற்றிலும் உள்ள காற்றை தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்யும். அதுமட்டுமல்லாமல், உங்கள் மனதிலும் மகிழ்ச்சியை நிறைக்கும்

2 தேவையற்ற விளக்குகளை அணைத்து விடுங்கள். சூரிய ஒளி நிரம்பிக் கிடக்கும் பகல் பொழுதில், வீடுகளில் விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஆட்கள் இல்லா நேரங்களில் விளக்குகளை அணைத்து விடுங்கள்

3 பேப்பர் இல்லா வாழ்க்கை வாழ பழகிக் கொள்ளுங்கள். வீடுகளிலும், அலுவலகங்களிலும் பேப்பரை முடிந்தவரை தவிர்க்கலாம். ஆன்லைன் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

4    பொது போக்குவரத்து வாகனங்களான பேருந்து, வாடகைக் கார்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதன்மூலம் வளிமண்டலத்தில் கார்பன் அதிகரிப்பை குறைக்கலாம்.

5  வார விடுமுறை நாட்களில் மால்கள், தியேட்டர்களுக்கு செல்லாமல், எங்காவது இயற்கை சார்ந்த இடங்களான பூங்காவிற்கு சென்று வரலாம்.

6.  சமையலறை கழிவுகளை மக்கிப் போகும் வகையில் எங்காவது சேமித்து வைக்கலாம். பின்னர் அவற்றை இயற்கை உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

7 – மழைநீர் சேகரிப்பு முறைகளை எப்போதும் கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், கிடைக்கும் தண்ணீரை சேகரித்து, தூய்மைப்படுத்தி பயன்படுத்தலாம்.

8 – வீட்டின் பால்கனி, மொட்டை மாடிகளில் தாவரங்களை வளர்க்கலாம். பாக்கெட்களிலும், கேன்களிலும் அடைத்து வைக்கும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இயற்கையான உணவுப் பொருட்களை உண்ணுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

 – மறுபயன்பாட்டு, மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் பொருட்களை மட்டும் நாள்தோறும் பயன்படுத்தலாம்

Leave a Reply