உலக சாதனை

பாராலிம்பிக்ஸ் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு

1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், மற்றொரு வீரரான பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினார்.

இந்த முறை, மாரியப்பன் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

பாராலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா 24வது இடத்தில் உள்ளது.

மாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

Leave a Reply