உலகின் முதல் “பேட்டரி’ விமானம்

உலகில் முதல் முறையாக மின்சார பேட்டரி மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக வானத்தில் பறக்கவைத்து, சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதனை உருவாக்கியுள்ள பிரான்ûஸச் சேர்ந்த “ஏர்பஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள போர்டாக்ஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையத்தில், “இ-ஃபன்’ என்று அழைக்கப்படக்கூடிய இந்த சிறிய ரக விமானம் கடந்த மாத இறுதியில் 10 நிமிடங்கள் பறக்கவைக்கப்பட்டு, சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த விமானமானது சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய, சப்தமில்லாத மற்றும் விலைகுறைவான விமான பயணத்தை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம் 19 அடியாகும். மின்சாரத்தை சேமிக்கும் விதமாக இதில் லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய சுமார் 120 பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன.
ஒருமுறை இந்த பேட்டரிகளை முழுவதுமாக சார்ஜ் செய்தால், 1 மணி நேரம் விமானம் பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறும்.
பெட்ரோல் நிரப்பிய இதே அளவிலான, வணிக ரீதியான விமானத்தில் 1 மணி நேரம் பயணம் செய்ய ரூ.3,300 வரை செலவாகிறது. ஆனால் இ-ஃபன் விமானத்தில் பயணிக்க ரூ.1000 மட்டுமே செலவாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply