உயர் தரத்திலான இலவசக் கல்வி

திருச்சியிலிருந்து திண்டுக்கல் போற ரோட்டில் மணப்பாறை கிட்ட பயணம் செஞ்சப்போ இந்த ஸ்கூல பார்த்தேன்,

உயர் தரத்திலான இலவசக் கல்வி1
நல்ல கட்டமைப்போட இருந்த ஸ்கூல்,

ஆனா போர்டுல “ப்ரீ ஸ்கூல்னு” போட்டிருந்துச்சு,…..

ஆச்சர்யத்தோட இறங்கி சுத்தி பார்த்துட்டு பக்கத்துல விசாரிச்சப்போ சொன்னாங்க,

“இந்த ஊருல பிறந்து இப்போ சென்னையில இருக்குற ஒரு தொழிலதிபர் தன்னோட சொந்த ஊர்க் குழந்தைகள் இலவசமா தரமான கல்வி பெறனும்னு சொல்லி, இத ரொம்ப கவனம் எடுத்து கட்டி இருக்கிறார்னு”,

சரி இத எதுக்கு அவர் பண்ணனும்னு கேள்வி எழுந்துச்சு,அதுக்குள்ளயே பேசிகிட்டிருந்த நபர் சொன்னாரு, “தன்னோட சொந்த ஊருல ஒரு வீடு கட்டணும்னு எல்லா பணக்காரங்களும் நெனப்பாங்க, ஆனா இவர் அதுக்கு பதிலா இந்த பள்ளிக்கூடத்தக் கட்டி ,இத பாக்குற மத்த தொழிலதிபர்களும் அவங்கவங்க ஊருல போட்டிக்கு ஸ்கூல் கட்டணும் அதுதான் என் விருப்பம்னு சொல்லுவாராம்”

..நல்ல விஷயங்கள்…. உண்மையிலயே பிரமிப்ப எற்படுத்துச்சு,……….

பிரியாணி போட்டி உட்பட எதையெதையோ ஷேர் பண்ற நாம, இந்த விஷயத்த கண்டிப்பா ஷேர் பண்றதன் மூலமா, உண்மையிலயே இத பார்க்குற பலருக்கும் தங்களோட கிராமத்துல இதுக்கான ஒரு சின்ன முயற்சி எடுக்குறதுக்கு தோணும்ல..

இந்தப் பள்ளியைப் பற்றிய மேலும் விபரம் அறிய விரும்பினால்
8939867331 என்கிற எண்ணில் அந்த நபரை நீங்களே தொடர்புகொண்டு கேட்கலாம்.. ஒரு பெரிய கல்விப்புரட்சிக்கான தொடக்கமாய் இது அமையும் என நம்புவோம் ..

இந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன் ! ஆச்சரியம் என்னவென்றால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து எட்டாவதற்கு மேல் படிக்க இயலாத அந்த இளைஞன் தற்பபோது வளர்ந்து தொழில்அதிபராகி கிட்டத்தட்ட பலகோடி செலவில் 18 கிராமம் பயண்படும்படி செய்துள்ளது உண்மையில் வியப்பாக இருக்கிறது.
If you are inspired pls share …

—————-
தகவல்…..
உதயசான்றோன்
சர்வதேச மனிதவள மேம்பாட்டுப்பயிர்சியாளர்

Leave a Reply