உன் அன்புக்குரிய கணவன்

ராமு வெளியூர் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினான். அந்த அறையில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. ராமு தன் மனைவிக்கு ஒரு E-மெயில் டைப்பிங் செய்தான்.
அதை அனுப்பும் அவசரத்தில் தவறாக வேறு ஏதோ மெயில் ஐடிக்கு

யாருக்கோ அனுப்பிவிட்டான். அவன் அனுப்பிய மெயில்

ஒரு விதவை பெண்ணுக்கு வந்து சேர்ந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கணவனை இழந்தவள். இறந்துபோன தனது கணவனை நினைத்து அழுதுகொண்டிருந்தாள்.
அப்போது அவள் மொபைலுக்கு ஒரு மெயில் வந்தது.எதேச்சையாக அவள் அந்த மயிலை பார்த்தாள்.அப்போது ராமு தவறுதலாக இவளுக்கு அனுப்பியிருந்த Mail ஐ படித்ததும், அவள்

தலைசுற்றி மயங்கி தரையில்

விழுந்தாள்…
(அதில் பின்வருமாறு எழுதி இருந்தது)

“அன்பான மனைவிக்கு, உன் கணவன்

எழுதுவது…
இந்த கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இங்கே கம்யூட்டர், இன்டர்நெட் வசதியெல்லாம் கூட

வைத்திருக்கிறார்கள். நமக்குப்

பிரியமானவர்களுக்கு Mail அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே நல்ல

சாப்பாடு, டபுள் பெட்ரூம் என எல்லா வசதியும் உள்ளது. நீயும் சீக்கிரமாக இங்கே வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
உனது வரவை எதிர்பார்த்து, வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,

உன் அன்புக்குரிய கணவன்….

Leave a Reply