உடலுக்கேற்ற உணவு எது

உடலுக்கேற்ற உணவு எது : செப்டம்பர் 1 – 7 தேசிய ஊட்டச்சத்து வாரம்
உற்சாக உணவுகள் :
கம்பு, கேழ்வரகு என்றாலே கூழ்; குதிரைவாலி என்றால் சோறு என்றுதான் பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை. சிறுதானியங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்துக்கு உதவும் பல பதார்த்தங்களைச் செய்ய முடியும். 
கேழ்வரகு கொழுக்கட்டை, கம்பு இனிப்பு மாவு உருண்டை, குதிரைவாலி கிச்சடி, சிறுதானியங்களால் ஆன போளி, குழிப்பணியாரம், தேங்காய் பர்பி போன்றவை ஊட்டச் சத்து நிறைந்த உணவுகள். ஐஸ்கிரீமுக்குப் பதிலாக இளநீர் ஜெல்லி, குளிர்பானத்துக்கு மாற்றாக பானகம் அல்லது பழச்சாறு அருந்துவது உடலுக்கு ஊட்டமும், மனதுக்கு உற்சாகமும் தருபவை.
இது இன்றைய மருத்துவர்கள் கூறும் அறிவுரை
ஆனாலும் இந்த உணவுகள் என் வாழ்நாளில் சுமார் 1949/50 வாக்கில் கடும் பஞ்சத்தில் இந்த உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருந்த நேரம் அது, இன்ைறய நாளில் இலவச அரிசி மனிதர்களுக்கு மீதமாக கால்நடைகளுக்கு  பால் உற்பத்திக்காக அரைத்து மாவுபொருளாக வழங்கப்படுகிறது. அந்நாளில் கால்நடை தீவனமாக அரிசித்தவிடுதான் உணவாகக் கொடுக்கப்படும் அது இன்றைய நாளில் தவிடுக்கு பதில் அரிசி மாவே உணவாகப்பயன்படுத்தப் படுகிறது, அன்றைய நாளில் கம்பு போன்ற சிறுதானியங்கள் தவிடுடன் கலந்து உணவாகக் கொடுப்பதை கண்டுள்ளேன், ஆனால் இன்றைய கால கட்டத்தில் அது மானிடர்களின் மருத்துவ உணவாகவும் ஆடம்பர உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது, அன்றைய நாளில் கோதுமை மாவினை ஒரட்டி என்று பனியாரம் சுட்டு்த்தருவதுபோல் தான் அதன்பயன்பாடு இருந்தது, அப்போதெல்லாம் சப்பாத்தி எப்படி இருக்கும் என்று தெரியாத நேரம் அதுஒரு வடஇந்திய அயல்நாட்டினர் மட்டும் பயன்படுத்தும் உணவாக அதிசய பொருளாக இருந்த உணவு இன்று லெளவிக உணவாக மாறிவிட்டது, மேலே கூறப்பட்ட சோளம், கம்பு, ராகி என்ற சிறுதானியமும், குதிரைவாலி பனிவரகு, தினை போன்ற மைனர்மில்லட் என்ற தானியங்கள் பசிக்காக வறுமையில் பயன்பட்ட இந்த உணவுப்பொருட்கள் இன்று ஆரோக்கிய உணவாக மருத்துவர்கள் ஆலோசனையில் வழங்கப்பட்டு வருகிறது. இதே உணவுகள் அன்று சரியாக தோடு நீக்காமல் பக்குவம் செய்யாமல், ருசியாக தயார் செய்யாத நிலையில் பஞ்சத்திற்கு பசி நீக்கும் உணவாக பயன்படுத்தப்பட்டது, மேற்கண்ட சிறு மற்றும் மிகச்சிறு தானியங்கள் புளித்த நீருடன் கலந்து களிபோன்று சாதமாக தயார் செய்து தான் அக்காலத்தில் சாப்பிட்டு வந்தோம். இன்றைய நாளில் அச்சிறுதானியங்கள் மார்டன் உணவு பண்டங்களாக மாறிவிட்டது புதுப்புது பெயர்களில்,,,,,

எனவே இன்றைய வாழ்வி்ல் நம் உணவு தானியங்கள் 

” புதிய மொந்தையில் உள்ள பழைய கள்”

 இதனையே இன்றைய பொழுதில் ( செப்டம்பர் 1 – 7 தேசிய ஊட்டச்சத்து வாரம் ) ஊட்டச்சத்து வாரம் கொண்டாடுவோம்

ஆக்கியோன் ; பழைய நினைவுகளில்

 இன்றைய வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

Leave a Reply