இலவசம்! இலவசம்! இலவசம்!

ஆக.15 2016 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

தரைவழி தொலைபேசி தொடர்பை ஊக்குவிக்கும் வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசி (“லேண்ட்லைன்‘) மூலம் செய்யும் அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இந்தக் கட்டணமில்லா சலுகை முறை சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வருகிறது. தரைவழி தொலைபேசி, செல்லிடப்பேசி என எந்த வகையான தொலைத்தொடர்பு இணைப்புக்கு ஞாயிற்றுக்கிழமை பேசினால் இனி கட்டணம் கிடையாது.

பி.எஸ்.என்.எல்.யில் ஏற்கெனவே, தினமும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி தொலைபேசி மூலம் செய்யப்படும் எந்த அழைப்புக்கும் கட்டணம் கிடையாது என்று சலுகை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply