இலகுவாக பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிச்சாச்சு

கண்டுபிடிச்சாச்சு….! கண்டு பிடிச்சாச்சு….!!

*********************************************
இலகுவாக பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிச்சாச்சு…! அட… நான் இல்லீங்க…! இந்த இயந்திரத்தை கண்டுபிடித்த பொருமை கோயம்புத்தூரை சேர்ந்த Venkat damodara naidu ஐயாவையே சாரும். 
இரண்டே நிமிடங்களில் இந்த இயந்திரம் மூலம் பனை உச்சிக்கு சென்றுவிடலாம். மிகவும் பாதுகாப்பானது. 
உட்கார்ந்த நிலையிலும்,நின்ற நிலையிலும் ஏற இரண்டு விதமான கருவிகளை உருவாக்கி இருக்கிறார் வெங்கட் ஐயா. விலை ரூ.3500 முதல் ரூ.7000 வரை.  50% அரசாங்க மானியமும் கிடைக்கிறது.
பயன்படுத்த ஆள் இல்லாமல் இன்று பல்லாயிரக்கணக்கான பனைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பனையும் காப்பாற்றப்பட வேண்டும். 
இன்று கருப்புகட்டியின் கிலோ விலை 200 ல் இருந்து 300 ரூபாய் வரையில் இருக்கிறது. ஒரு நுங்கு பத்து ரூபாய்க்கு விலை போகிறது.
பனை ஏற கருவியும் கிடைத்தாகி விட்டது. எனது கட்டுப்பாட்டில் 400 பனைகள் இருக்கிறது. அந்த பனையை இலவசமாக பயன்படுத்தி கொள்ளுங்கள். 400 பனைகளில் பதநீர் இறக்கி சுத்தமாக கருப்பட்டி காய்த்து எனக்கே தந்து விடுங்கள். ஒரு கிலோ கருப்புகட்டி 200 ரூபாய் விலையில் நானே வாங்கிக்கொள்கிறேன். 
பதநீர் இறக்கவும்,கருப்புகட்டி காய்ச்சவும் அனுபவம் மிக்க பெரியவர்களிடமிருந்து பயிற்ச்சியும் பெற ஏற்பாடு செய்கிறேன். ஒரே நாளில் கற்றுக்கொள்ளலாம்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் முன் வாங்க…!
பனை ஏறும் கருவிக்கு தொடர்பு கொள்ள:
திரு. வெங்கட் தாமோதரன் நாயுடு

R.TEC

கோயம்புத்தூர்.

9944284440
எனது தொடர்பு எண்:
பசுமை சாகுல்

9442582902
ஆர்வமுள்ள எனது நண்பர்களே! உங்களையும் இப்பணியில் கைகோர்க்க அழைக்கின்றேன்.
திருவழகன் பாண்டியன்

Devarpiran Krishnan

இனிகோ ஆன்றோ சேவியர்

Malaramuthan Rajamoni

Parthiban Manickam

Senthil Kumar

Leave a Reply