இன்றிரவு வேண்டாம் காண்டம் – அரசு

பார்ஸிகள், இறந்த உடலை அடக்கம் செய்யும் முறை மிக விசித்திரமானது. இறந்தவரின் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே, கழுகுக்கு இரையாக வைத்துவிடுவார்கள்.

அப்படி, இறந்த உடலைக் கொண்டுபோய் வைக்கும் கட்டடத்துக்கு, ‘டாக்மா’ அல்லது ‘டவர் ஆஃப் சைலன்ஸ்’ என்பது பெயர்.

இதற்கு, பார்ஸிகள் சொல்லும் விளக்கம் என்னவென்றால், இறந்த உடலைப் புதைப்பதால் மண் மாசுபடுகிறது. எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. நதிகளில் உடலைவிடுவதால் நீர் மாசுபடுகிறது. இறந்த பிறகு, இந்த பூமியை மாசுபடுத்தக் கூடாது என்ற காரணத்தால் அவற்றை கழுகுக்கு உணவாகத் தந்துவிடுகிறோம் என்கின்றனர்.

ஆனால், இது ஒரு பழைமையான பாலைவனச் சடங்கு. அங்கே, இறந்த உடல்களை இப்படி கழுகுகளுக்கு உணவாக அளிக்கும் முறை இன்றும் இருக்கிறது. அதையே பார்ஸிகளும் பின்பற்றுகின்றனர் என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

பார்ஸி மதம் ஹிந்து மதத்தின் கஸின் என்பார்கள். வேதகாலத்துக்கு முன்பு ஆரியர்களில் இரு பிரிவாக பிரிந்து சண்டை வந்து ஒரு பிரிவு ஆரியர் பஞ்சாப்பிலிருந்து ஈரான் போய் குடியேறியதாகவும் அவர்களே பார்ஸிகள் எனவும் கூறுவார்கள்.

 

பார்ஸி என அழைக்கப்படும் சமூகம் இந்தியாவில் உண்டு. இவர்களை பற்றி இந்தியர்கள் பலருக்கும் அதிகமாக அல்ல, குறைவாக கூட தெரியாது. காரணம் இவர்கள் ஜனத்தொகை வெறும் 69,000 மட்டுமே

இந்தியாவின் பொருளாதாரத்தையே தீர்மானிப்பவர்கள் பார்ஸிகளே...டாட்டா, கோத்ரெஜ், நுஸ்லிவாடியா உள்ளிட்ட மிகப்பெரும் தொழில்சாம்ராஜ்யங்கள் பார்ஸிகளுடையதே. பாகிஸ்தான் நிறுவனர் முகமதி அலி ஜின்னாவின் மருமகனும் ஒரு பார்ஸியே. நேருவின் மருமகன் பெரோஸ் காந்தியும் பார்ஸியே

இப்படி மிகப்பெரும் வணிக சமூகமாக இருப்பதால் இவர்களில் பலரும் நன்றாக சம்பாதிக்கவேண்டும், படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் திருமணத்தை தள்ளிபோட்டு வருகிறார்கள். அதனால் இவர்கள் ஜனதொகை குறைந்துகொண்டே வருகிறது. அதனால் “நாம் இருவர் நமக்கெதுக்கு இன்னொருவர்” பாணி மக்கள் தொகை கட்டுபாட்டு விளம்பரஙக்ளை செய்து வரும் இந்திய அரசு பார்ஸிமொழியில் மட்டும்பொறுப்போடு இருங்கள். இன்றிரவு காண்டம் பயன்படுத்தவேண்டாம்” என விளம்பரம் செய்து வருகிறது

thanks

— min tamil

&

— S. Ramakrishnan.

Leave a Reply