இந்துப்பு

கல்லுப்பு என்ற சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு ROCK SALT என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடுதான். ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதாசாரத்தில் உள்ளது. மேலும் இந்த உப்பில் இந்த அயோடின் போன்ற விஷ வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதில்லை.
கல்லுப்பு என்ற சோற்றுப்பு சோடியம் குளோரைடு என்ற வேதிப் பெயர் கொண்டது. இதை செந்தமிழில் அளம் என்பார்கள். முன்னாளில் சம்பளம் என்று தொழிளாளர்களுக்கு கொடுப்பது (சம்பு+அளம்=சம்பளம்) சம்பா என்ற நெல்லும் உப்பும்தான். எனவே இது லட்சுமி வாசம் செய்யும் பணமாகக் கருதப்பட்டது. எனவே செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் உப்பு, உறைமோர், விதை நெல், வசம்பு(பேர் சொல்லாதது), நிறை குடம் போன்றவற்றை அறவே தர மாட்டார்கள். இது மட்டுமல்ல மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பின் இவற்றைத் தர மாட்டார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்புடன், அயோடின் என்ற வேதிப் பொருளை கலக்க உப்பு நஞ்சாகிவிட்டது.
உப்பை சேர்க்காத பொருள்களே இல்லை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். இன்று உப்புள்ள பண்டம் குப்பையிலே என்று சொல்லும் அளவுக்கு அயோடின் கலந்த உப்பின் கோர முகம் உள்ளது. அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியான தைராய்டு சுரக்கும் சுரப்பு நீர்களான T3 ,T4 ஆகியவை பாதிக்கப்பட்டு விளைவாக உடலின் முழு வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக உலவும் அவலத்தை நாம் வெகு சீக்கிரம் நாம் காணலாம். கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டியுடன் மக்களும், எதிர்கால சந்ததிகளும் அல்லாட வேண்டாம்.
இந்த இந்துப்பு பல மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெறவல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார். அந்தப் பாடல்
இந்துப்பு திப்பிலி இயல் பீதரோகிணி
நந்திப்பூச் சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக்கு அருந்ததி தோன்றிடும்
நந்தி நாதன் நயந்து உரைத்ததே. -திருமூலர் வைத்திய சாகரம்
இந்துப்பு, திப்பிலி,பீத ரோகிணி ஆகியவற்றை சமமாய் எடுத்து நந்தியாவட்டம் பூச்சாற்றில் அரைத்து கண்ணிலிட குருடன் கண்ணுக்கு அருந்ததி என்னும் நட்சத்திரம் தெரியும் என்று நந்திக்கு சிவன் கூறியுள்ளார்,என்பதே இதன் பொருள்.
இப்படி மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால், உடலிலுள்ள துர் நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும். காயசித்திக்கும், பத்தியத்திற்கும், காய கற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது. இதை உபயோகித்து, அயோடின் நஞ்சு கலந்த சோற்றுப்பை தவிர்த்து எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

Leave a Reply