இது யாருக்கு அவமானம்?

  என்னதான் நடக்கிறது என கவனித்துக்  கொண்டிருந்தேன்! ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை, மக்களும் கண்டுகொள்ளவில்லை. GST – வரி விதிப்பு குறித்து நொந்து கொள்ளும் நாம், வாழ்நாளில் இதுவரை கண்டுகொள்ளாத திருக்குறளை தேடிக் கண்டுபிடித்து பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
   உழவுத்தொழில்,  உழவின் முக்கியத்துவம் குறித்து திருவள்ளுவர் சொன்னதையெல்லாம் ஒருத்தரும் பகிரமாட்டார்கள். அதனால் தான் இன்றைய நாள் குறித்தும் எண்ணவில்லை!
       இன்று உழவர் தினமாக உழவர் சங்கங்கள் தமிழகத்தில் கடைபிடிக்கிறார்கள். உழவர்களின் போராட்டத்தை சகித்துக் கொள்ளாத, தமிழக அரசு சுட்டுக்கொன்ற 62 உழவர்களின் நினைவாக கடைபிடிக்கப்படும் நாள் என்பது இந்த தலைமுறைக்கும் மறைக்கப்படுகிறது. 
     எத்தனையோ தினங்களை கொண்டாடித்தீர்க்கின்ற முகநூல் பயன்பாட்டாளர்கள் இனியாவது ஒவ்வொரு ஆண்டும் சூலை 5 தினத்தை உழவர்கள் தினமாக போற்றப்பட வேண்டும். தன் நல ஊடகங்கள் தான் கண்டுகொள்ளவில்லை. நாமாவது இதனை எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம்.
   உழவன் அழிகிறான் என்றால் நாமும் அழிந்து கொண்டிருக்கிறோம் என்பதை இனியாவது நினைவில் கொள்வோம்.
*உழவனுக்கு கை கொடுப்போம்*
– ப்ரியமுடன்+உரிமையுடன் உங்கள் செல்வகணேஷ்

Leave a Reply