இது தவறா?

இது வாங்கியவன் தவறா?கொடுத்தவன் தவறா?

ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்து பாட்டிலில் அடைக்கவும் சேர்த்து ஆகும் செலவு 3 ரூபாய்.அதை அவர் கடைக்காரருக்கு 11 ரூபாய்க்கு கொடுப்பார்.கடைக்காரர்அதை 20 ரூபாய்க்கு விற்ப்பார்.அதற்க்குப்பெயர் வியாபாரம்.

ஒருலிட்டர் பாலில், ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து விற்ப்பார்.அதற்கும்பெயர் வியபாரம்.

ஒரு லிட்டர் மது தயாரிக்க ஆகும் செலவு சுமார் 50 ரூபாய்.அதை 800 ரூபாய்க்கு அரசே விற்க்கும் அதற்க்குப்பெயர் கொள்கை முடிவு.

அரசு ஊழியர்கள்,அதிகாரிகளுக்கு வேலைக்கான சம்பளம் கொடுத்தும் கையூட்டு வாங்காமல் எந்த வேலையையும் அவர்கள் செய்வதுமில்லை.எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் ஏன் கையூட்டு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் பொது மக்களிடம் இல்லை.

தனியார் கல்விக் கூடங்கள்,மருத்துவ மனைகள்,அரசு ஒப்பந்ததாரர்கள் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து நடத்துக்கின்றனர்?

அரசியல்வாதிகள் செய்த முதலீடு எவ்வளவு?பெற்ற லாபம் எவ்வளவு?

ஒரு சதுர அடி மனையை 500 ருபாய்க்கு வாங்கிய ஒருவருடத்தில் அதைவிட பலமடங்கு லாபத்தில் விற்க்க முடிகிறது.

எந்த முதலீடும் போடாமல்,ஒரு சில மாதங்களில் நடித்து கொடுக்கும் ஒரு படத்திற்க்கு இத்தனைக் கோடி சம்பளம் வாங்குகிறீர்களே என்றால்,”என் படம் வசூலாகும் என்பதால்தானே கொடுக்கிறார்கள்.என் படங்கள் ஒடாவிட்டால் இவ்வளவு சம்பளம் கொடுப்பார்களா” என்கின்றனர்.

ஆனால் வட்டிக்கு கொடுப்பவர்,வட்டிக்கு தன்னிடம் வாங்கவருபவரிடம் ஒரு ஆயிரத்துக்கு மாதம் ஐம்பது ருபாய் வட்டி சம்மதமா,மாத மாதம் வட்டியை கட்டிவிட வேண்டும் என்கிறார். வாங்குபவர் முழுசம்மதத்துடன் மிகுந்த மகிழ்ச்சியுடன்,நன்றியுடன் வாங்கிசெல்வார்.

வட்டிக்கு கொடுப்பவருக்கு,வாங்கவருபவர் தனக்கு சொந்தமோ,தன் சாதி,மதம்,தெரு,ஊர்,மாவட்டம்,தன் கட்சிகாரன்,ஆத்திகன்,நாத்திகன் என்று எதுவும் பார்த்துக் கொடுப்பதில்லை.

அவன் நாணயமானவன் என்ற ஒரு தகுதி இருந்தால் பெற்றுவிடலாம்.

தன் ஒரே மகன் சாலை விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் தந்தையிடம் ஐம்பதாயிரம் உடனே கட்டுங்கள்.அதன் பின்தான் சிகிச்சை தொடங்கப்படும் என்ற நிலையில் உள்ள தந்தைக்கு எத்தனை உறவுகள் பணம் கொடுத்து,உன்னால் முடியும் போது திருப்பிக் கொடு என உதவுகிறோம்?

எத்தனை மாணவ,மாணவியரின் கல்விக்கு திடீர் என்று பணம் கட்ட முடியாத தந்தைக்கு உறவினர்கள் கொடுத்து உதவுகிறோம்?

மகளின் திருமணம்,வேலை வாய்ப்பைப் பெற லஞ்சம் கொடுக்க பணம்.தொழில் தொடங்கப் பணம்.வேலைக்காக வெளிநாடு செல்ல பணம்.கஷ்டப்பட்டு விவசாயம் செய்து,கதிர்வரும் நேரத்தில் தாக்கிய பூச்சியை கொள்ள,கடைசியாக இன்னும் ஒருதரம் உறம் போட்டால்,விளச்சல் பல மடங்கு அதிகமாக கிடைக்குமே,கையில் நகையும் இல்லை,கடன் கொடுப்பார் யாரும் இல்லையே என்ற நிலையில் உள்ள அனைவரும் நாடுவது வட்டிகடைக் காரர்களைத்தான்.

எவ்வளவோ வசதியான தன் கூட பிறந்த சகோதரன்,சகோதரி,அப்பா,பிள்ளை என ஆயிரம் சொந்தங்கள் இருந்தும்,வங்கியில் சேமிப்பில் பணம் இருந்தும் யாரும் யாருக்கும் உதவிக்கொள்வது கிடையாது.

காரணம்?கடன் அன்பை,நட்பை,உறவை முறிக்கும்.

கடைத் தெருக்களில்,நடைபாதையில் கடைவைத்து இருப்பவர்கள் அதிகம் பேர் வட்டிக்கு வாங்கித்தான் தொழில் செய்வதும்,மாலை நேரங்களில் தினம் கொஞ்மாக கட்டுபவர்களை நிறைய காணமுடியும்.

தொழில் செய்ய,வெளிநாடு செல்ல,விவசாயம் செய்ய வட்டிக்கு வாங்கி பயன் அடைந்தவர்களை நிறையப் பேரை நான் பார்த்துள்ளேன்.

குடிப்பதற்க்கு,ஆடம்பர செலவுக்கு,ஊதாரித் தனத்துக்கு,வட்டிக்கு வாங்கி சிலவு செய்துவிட்டு கட்டாமுடியாமல் இருப்பவர்கள் ஒரு சிலரே.

வட்டிக்கட்டவோ முதலை திருப்பித்தரவோ முடியாத நிலையை உடனே அறிந்து,இருக்கும் நிலத்தை,நகையை,வாகனங்களை,அதுவும் இல்லையா குடியிருக்கும் வீட்டையாவது விற்று உடனே கடனை அடைக்க துணிச்சலான முடிவு வேண்டும்.அதை செய்யாமல்,இருப்பதை விற்றால் நம் கௌரவம் என்ன ஆகும்.உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்ற வரட்டு கௌரவம் பார்த்தால் கடைசியில் எல்லாம் போய் உயிரும் போகும்.

இது வாங்கியவன் தவறா?கொடுத்தவன் தவறா?

Leave a Reply