ஆளுநர் மீது பாலியல் புகார் – ராஜினாமா?

வி.சண்முகநாதன் 1949 ஆம் ஆண்டு தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் மீனாட்சி சுத்தரத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் 1962 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில்( RSS)சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்கு பல பதவிகள் கொடுக்கப்பட்டன. தமிழில் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். [1]

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த சையது அகமது மரணம் அடைந்ததை அடுத்து இவர் 2015 அக்டோபர் 1 முதல் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[2] [3]

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் மேகலாயா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகரான சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

மேகலாயா மாநில ஆங்கில நாளேடான “Highland Post” நேற்று முன்தினம் தலைப்புச் செய்தியாக, நேர்முக தேர்வுக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆளுநர் மீது புகார் என்ற தலைப்பில் சண்முகநாதன் படத்துடன் செய்தி வெளியிட்டது. இது வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஆளுநர் அலுவலகத்தின் மாண்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் செயல்படுவதாகவும் அவரை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை ஊழியர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 98 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கடிதத்தின் நகல் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகை, மத்திய உள்துறை அமைச்சர், முதல்வர் முகுல் சங்மா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 அம்சங்கள் அடங்கிய அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

”ஆளுநர் மாளிகையின் மாண்புக்கு களங்கம் தரும் வகையில் ஆளுநர் சண்முகநாதன் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையை ( ராஜ்பவன்) இளம்பெண்களின் விடுதி போல மாற்றிவிட்டார்.

இளம்பெண்கள் தமது விருப்பம் போல் வந்து தங்கவும் அல்லது திரும்பவும் ஏற்ற இடமாக மாற்றப்பட்டுவிட்டது. தடையின்றி அவரது அறைக்கு அவர்கள் நேரடியாக வந்து செல்கிறார்கள். ஆளுநரின் இல்லத்தின் பாதுகாப்பும் விட்டுக்கொடுக்கப்படுகிறது

இரண்டு மக்கள் தொடர்பு அலுவலர்கள், ஒரு சமையல் ஊழியர், இரவுப் பணி நர்ஸ் ஆகியோரை ஆளுநர் நியமித்துள்ளார். அவர்கள் அனைவருமே பெண்கள். அவருக்காக பணி செய்ய பெண்களையே அவர் தேர்வுசெய்துள்ளார். தனது தனி செயலர் ஆண் என்பதால் அவரை ஆளுநர் செயலகத்துக்கு மாற்றிவிட்டார்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply