ஆரோக்கியம்

வீட்டில் ஆர் ஓ வைத்து இருக்கிறார்கள் பிரச்சனையையும்
வைத்திருக்கிறார்கள் விவரம் எப்படி சொல்வது

எப்போதோ நிரப்பிய மினரல் வட்டாரை
எப்போடியோ கேனில் அடைத்து வீட்டில்

தள்ளி விடுகிறார்கள்
தகவல் சொன்னால் வீட்டுக்கே வந்து தருகிறார்கள்

பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடிவதில்லை அது
பின்னி பிணைந்து விட்டது நம் வாழ்வில்

மண் வீடுகள் எல்லாம் மலைக்க வைக்கும்
மாடி (அடுக்கு) வீடுகள் ஆகின.

காலத்திற்கு ஏற்ப வாழ வேண்டியதுதான் என
கனவுகளை கழற்றி எறியாதீர்கள்

வீட்டிலே மரம் வைக்க முடியாவிடில்
மாடியில் தோட்டம் போடலாம்

மனதை மகிழ்ச்சியாக்க
மண் வளம் சிறக்க செய்யலாம்

நிழலில் வரும் செடிகளையும்
நிஜமாகவே நம்மால் வளர்க்க முடியும்

இவைகள் ஆக்சிஜன் தருகிறதோ
இல்லையோ நெகடிவ் எனர்ஜியை

எடுத்துக்கொள்கிறது நம்மை
எப்போதும் இளமையாய் வைத்திருக்கிறது

என் வீட்டில் உள்ள ஜாமியா
என்ற செடி இந்த படத்தில் உள்ளது

நிழலில் வரும் ஒரு
நிலையான  செடி

பூக்காது காய்க்காது
பசுமையாக இருக்கும்

சுற்றுபுறத்தை இந்த செடி
சுத்தமாக வைத்துக்கொள்ளும்

மண் வாசனை மாறாமல் இருக்க
மண் சட்டியில் சமையல் செய்யுங்கள்

விசில் அடித்து சாப்பாடு தயார் என்று
வரவழைக்கும் குக்கரை விடுத்து

மண் பானையில் சமையல் செய்யுங்கள்
மக்னீஷயம் கால்சியம் என

அனைத்து சத்தும் இதில் இருக்கு
அப்புறம் என்ன உடனே

அலுமினியம் சில்வர் பத்திரங்களை
அப்படியே எரிந்து விட்டு

மண் பத்திரங்களால் வீட்டு அடுப்பங்கரையை
மண் வாசனையால்  பரப்புங்க

அருமையான வாட்டர் பில்டர் நம்மோடு
அன்போடு உறவாடும் மண் பத்திரம் தான்

கஞ்சி கலயம் சமைத்து வைக்க என
கருப்பு சட்டி என அத்தனையும் சுவையோ சுவை.

பழைய சாதத்தை எங்கம்மா கல் சட்டியில் தான்
பத்திரமாக வைப்பார்கள் மறு நாள் சாப்பிடுவதற்கு

இப்பவும் நான் மண் சட்டியில் தான்
இந்த சமையல் செய்கிறேன் அதுமட்டுமா

வீட்டுக்கு வருபவர்க்கும் மண்ணில் செய்த கப் தான்
விருந்தாளிக்கு தேநீர் (பால் இல்லாமல்)

வட்டார் ஜக் டம்ளர் பிளேட்டு மற்றும்
வடை சட்டி என எல்லாம் மண்ணில் தான்

சூப் கப் மற்றும் ஸ்பூன் கரண்டி என மண் தான்
சூப்பர். சுவைத்து பாருங்கள். நோயின்றி வாழ

மண் பத்திர சமையலுக்கு மாறுங்க நாம
மாறாவிடில் எப்படி ஆரோக்கியத்தை கொண்டு வருவது

நோய் எதிர்ப்பு சக்தி தரும் மண் பாத்திரத்திற்கு
“நோ” சொல்ல யாராவது விரும்புவார்களா?

விசு அய்யர்

Leave a Reply