ஆரோக்கியமான குழந்தைகள்

பெண்கள் தமது 40 வயதிற்கு பிற்பட்ட காலங்களில் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆரோக்கியமற்றவர்களாக இருப்பார்கள் என இதுவரை கூறப்பட்டுவந்தது.
ஆனால் 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை விட 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மனநிலையில் திடகாத்திரம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என புதிய ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது.
லண்டனிலுள்ள Birkbeck பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி என்பன இணைந்து நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
40 வயதுகளில் பெண்கள் தம்மை குழந்தை பெறுவதற்கு சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள முடிவதாக இருத்தலும், அனுபவத்தின் அடிப்படையில் குழந்தைகளை சிறந்த சூழலில் வளர்க்கக்கூடியதாக இருத்தலுமே இதற்கு காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply