ஆனைப் புளிய மரம்

‘ஆனைப் புளிய மரம்’ எனப்படும் ‘ஆப்பிரிக்கன் பாவ்பாப்’ (African Baobab) மரமும் அதனுடைய தண்டு பகுதியில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் நீரைத் தேக்கி வைத்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது. அதனுடைய தண்டுப் பகுதியில் ஒரு துளையிட்டு அதன் மூலம் சுமார் 5000 லிட்டர் நீரை சேகரிக்கலாம். ஆப்பிரிக்கப் பாலை வனங்களில் வளர்ந்திருக்கும் இந்த மரங்களில் இருந்து அவ்வழியாகப் பயணம் செய்வோர் தமக்குத் தேவையான நீரைப் பெறுகின்றனர். இதன் தாவரவியல் பெயர் ‘ஆடன்சோனியா டிஜிடேடா’ (Adansonia digitata) என்பதாகும். உலகின் சில இடங்களில் 6000 ஆண்டுகள் வயதான மரங்கள் கூட இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

500 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளியமரம்
ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இவ்வகை மரங்கள் அரேபிய வணிகர்களாலும், மொகலாயப் படையில் வீரர்களாகப் பணியாற்றிய அப்பிரிக்கர்களாலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. இவற்றின் வேர்களில் இருந்தும் நீரைச் சேகரிக்கலாம்.
இப்படியெல்லாம் மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதற்காக வேண்டி இயற்கை அன்னை நமக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளை எண்ணி நாம் சந்தோசிக்கின்ற அதே வேளையில் அவைகளைப் பாதுகாக்கவும் நம்மாலான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதுவே நாம் இயற்கையின் மாட்டுக் காட்டுகின்ற நன்றிக் கடனாகும்.

Leave a Reply