ஆசிரியையாக பணிபுரியும் நீதா அம்பானியின் சகோதரி!

உலக அளவில் பணக்கார குடும்பம் அம்பானியின் குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அளவில் முதல் ஐந்து பணக்காரர்களின் பட்டியலில் அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் இடம் பிடிப்பார்கள்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி இந்தியாவின் பெண் தொழிலதிபர்களில் முதலிடம் பிடிப்பவர். இவருடைய இளைய சகோதரி மம்தா தலால் மும்பையில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சியும், நிர்வாகத்திறமை உடையவரான இவர் பாந்த்ராவில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

இவர் பல விஐபிகளின் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் மகள் சுஹானா ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஆகியோருக்கு வகுப்பு எடுத்துள்ளார். குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று கூறும் இவர், பாடம் நடத்துவது மட்டும் இல்லாமல் அவர்களுடன் நேரம் செலவிடுவது மிகவும் விருப்பமான ஒன்று என்கிறார். தனது சகோதரி நீதா அம்பானிக்கு உதவும் நோக்கத்தில் பள்ளியில் சேர்ந்து பணிபுரிந்து வருவதாக மம்தா கூறியுள்ளார். விஐபிகளின் பிள்ளைகள் என்று தனியே பார்க்காமல் எல்லோரும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply