அவற்றின் பெயர் ‘ப்ளீச்சிங் கெமிக்கல்’. புரியும்படி சொன்னால், ‘பினாயில்.’

மைதாவின் அறிமுகம்
பரோட்டா தயாரிக்கப்படும் மைதா மாவு 1930-களில்தான் அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் ‘பேஸ்ட்ரி பெளடர்.’ அதாவது பசைமாவு.  ஒட்டும் பயன்பாட்டிலிருந்து மெள்ள மெள்ள உணவுப்பொருளாக மாறிய மைதா, சில ரசாயன சுத்திகரிப்புகளுக்குப் பிறகு, அழகான பொருளாக, பார்ப்போரை ஈர்க்கும்விதத்தில் பளிச்சென வெள்ளையானது.

உணவுப் பொருள் ப்ளீச்சிங்
இன்றைக்குப் பல உணவுப் பொருட்கள் ரீஃபைண்டு, ப்ளீச் செய்யப்படுகின்றன. இதற்கு, பலவகையான ப்ளீச்சிங் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாகரிகமாகச் சொன்னால் அவற்றின் பெயர் ‘ப்ளீச்சிங் கெமிக்கல்’. புரியும்படி  சொன்னால், ‘பினாயில்.’ எதைப் பயன்படுத்திக் கழிவறையைச் சுத்தம் செய்கிறோமோ, அதில் உள்ள ரசாயனப் பொருளோடு சேர்ந்ததுதான், எல்லா வெளுப்பான்களும். ‘பளிச்’ வெள்ளையோடு எந்தப் பொருள் இருந்தாலும், அது இந்த ப்ளீச்சிங் கெமிக்கலின் உதவியோடு வெளுக்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

Leave a Reply