அவசர சட்டம் என்றால்…..

இன்னும் சிலருக்கு அவசர சட்டம் என்றால், அது தற்காலிகமானது என்ற புரிதல் தான் இருக்கிறது என்றே நான் அறிகிறேன். ஆளுநர் கையொப்பமிட்டு, அதை சட்டமன்றத்தில் முன்வைத்து, சட்டத்திருத்ததை நிறைவேற்றினால் அது நிரந்தர சட்டமாகும் என்பது பலருக்கும் தெரியாத தகவலாகவே இருக்கிறது.

இதில் உச்சநீதிமன்றம் தடை விதிக்குமே ? என்ற கேள்வியும் சிலரால் எழுப்பப்படுகிறது. 2009ல் கொண்டுவரப்பட்ட சட்டமானது ஜனாதிபதி அல்லது மத்திய அமைச்சகங்களின் ஒப்புதல் இல்லாமல் கொண்டுவரப்பட்டது. அதனால் அது செல்லுபடியாகாத சட்டமாகிவிட்டது. ஆனால் தற்போது கொண்டுவரப்படும் சட்டத்திருத்தத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்துள்ளது. காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கியும், அதில் சில சட்டத்திருத்தங்களை நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு தான் ஒப்புதல் அளித்துள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள காரணத்தால், இது தடை செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்ததாக அரசின் தனிப்பட்ட முடிவுகளில் நீதிமன்றமும் பெரும்பாலும் தலையிடுவது இல்லை. இந்த அவசர சட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர்கள் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் அந்த சட்டவடிவை முன்வைத்து சட்டத்திருத்தத்தை நிறைவேற்றினாலே அது நிரந்தர சட்டமாகிவிடும். இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் எண்ணியிருந்தால், தீர்ப்பை 1 வார காலத்திற்கு தள்ளி வைக்க அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கமாட்டார்கள். நான் முன்பே, ஆனந்த் (சால்வே அவர்களின் உதவியாளர்) அவர்கள் தெரிவித்த தகவலை பகிர்ந்திருக்கிறேன். வழக்கை விசாரிக்கும் அமர்வு, போராட்டத்தை கண்டு வியந்துள்ளதாகவும், இது தீர்ப்பில் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறியதை அப்படியே பதிவிட்டிருந்தேன். ஆக, இனி எதை பற்றியும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.

SC JUDGEMENT PENDING ON CENTRAL GOVERNMENT NOTIFICATION NOT ON STATE GOVERNMENT.

STATE GOVERNMENT AMENDED PCA
COMING TUESDAY THEY WILL PASS IT ON LEGISLATIVE ASSEMBLY – IT WILL AGAIN FORWARDED TO PRESIDENT VIA GOVERNOR FOR PERMANENT LAW.

SO ONLY 1 WEEK TIME CENTRAL GOVERNMENT GOT FROM SC.

ORDINANCE CAN BE CONVERTED IN TO LAW OR ACT IF IT APPROVED BY LEGISLATIVE ASSEMBLY AND ITS CONSTITUTIONAL VALUE INCREASE IF IT GOT APPROVAL BY PRESIDENT/GOVERNOR/HOME & CONCERN MINSITRY

 

sathish kumar  – facebook

Leave a Reply