அரிவாள் மூக்குப் பச்சிலை

வேறு பெயர் – அரிவாள் மனைப் பூண்டு
தாவரவியல் பெயர் – SIDA RHOMBOIDEA – LINN
இது சாதரணமாக தன்னிச்சையாக பயிராகும் பூம்டினம். தென் இந்தியா எங்கும் கிடைக்கும்.
மருத்துவ பகுதி – இலை
சுவை – துவர்ப்பு, சிருகைப்பு , வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு .
செயல் — குருதி பெருக்கடக்கி — STYPTIC
குணம் – ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தை ஆற்றும். கொடிய விடத்தையும் இரத்தக் கெடுதியில் பிறந்த தலை நோயையும் நீக்கும்.
பாடல் –
வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்திவிடும்
துட்டக் கடு வோட்டுந் தோன்றி மிகக் – கெட்ட
பிரிவார்ற் றலையைப் பிளக்கும் வலி நீக்கும்
அரிவாள் மூக்குப் பச்சிலை
— அகத்தியர் குணவாகடம்

வெட்டுக் காயமுள்ள இடத்தில் இப்பச்சிலையை அரைத்துக் பூச இரத்தம் நிற்கும், காயம் வெகு சீக்கிரத்தில் ஆறிப்போம். இப் பச்சிளையுடன் மிளகு, பூண்டு சேர்த்துக் கர்கமாக்கி கொடுக்க விடம் நீங்கும். மேற் கூறிய தலை நோயும் விலகும்.

Leave a Reply