அரசவால் ஈபிடிப்பான்(Asian Paradise Fly Catcher)

திரு G. காமராஜ் (BIOLOGIST GUINDY CHILDRENS PARK,CHENNAI) அவர்கள் எழுதிய நூலிலிருந்து

விலங்கியல் பெயர்: டெர்ப்ஸிபோன் பாரடைஸி
இப் பறவைகளில் ஆண் பறவை 50 செ.மீ நீண்ட வாலினையும்,பெண் பறவை 20 செ.மீ அளவிலும் காண்ப்படுகிறது. ஆண் பறவை தூய வெண்மையான நீண்ட வாலினையும் பட்டுப் போன்ற மென்மையான தலையையும் கொண்டுள்ளது. இதன் இறகு கறுப்பு வண்ணத்தில் காணலாம். பெண் பறவை ஆரஞ்சு நிற வண்ணத்துடன் கறுப்பு நிறத்தலையும் இறகும் காண்ப்படுகிறது. இதன் உணவு பூச்சிகளாகும்.

 


இந்த பறவையைப் பற்றி மேலும் தன் அனுபவத்தை பதிவு செய்திருந்தார் திரு பிரபாகரன் அவர்கள்.

இந்த பறவையின் பெயர் மற்றும் குணாதிசியங்கள் குறித்த சில தகவல்களை திரு குபேந்திரன், திரு கௌஷிக் ஆகியோர் பதிவிற்றிருந்தனர்.

இப்பறவை நமது ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்தியாவில் அதிகமாக காணப்படும் பறவை. கீழுள்ள படத்தில் இருப்பது ஆண் பறவை. நீளமான வெண்நிற அல்லது செந்நிற சிறகுகளுடைய இப்பறவையின் தலைப்பகுதி மட்டும் மின்னும் கரு நிறமாக இருப்பது இப்பறவையை அழகாகக் காட்டுகிறது.
பறந்து கொண்டிருக்கும் போதே தனது அலகால் அழகாக கீழுள்ள பூச்சிகளை பிடிக்கும் திறன் கொண்ட இந்த பறவைக்கு உணவுச் சங்கிலியில் முக்கிய இடமுண்டு! பூச்சிகள் அதிகமுள்ள அடர்த்தியான இலைகளைக் கொண்ட மரங்களில் இவற்றைக் காணலாம். இந்தியா தவிற இலங்கையிலும் அதிகம் இப்பறவை தென்படுவதுண்டு.
மே முதல் ஜூலை வரை இவற்றிற்கு இனப்பெருக்க காலம். நவம்பர் முதல் பிப்ரவரி காலகட்டத்தில் தென் தமிழகத்தில் அதிகம் இவற்றைக் காணலாம். அதிகமாக இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பறந்து செல்லும் (Migratory Birds) வகைகளில் இதுவும் ஒன்று.
அதிகமாக சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும் குணாதிசியம் கொண்ட இப்பறவைக்கு அல்குகள் மிகவும் உறுதியாக இருக்கும். இவற்றின் இனப்பெருக்க காலம் 14 முதல் 16 நாட்கள் மட்டுமே. 09 – 12 நாட்களில் கூடு கட்டும். ஆண் ப்றவையும் பெண் பறவையும் தத்தம் உதவி, இரண்டும் சேர்ந்து கூடு கட்டும். இவை இடும் முட்டைகளில் இருந்து குஞ்சு வெளிவற 21 முதல் 23 நாட்கள் வரை ஆகும்.
காடுகள் அழிப்பு, மரங்களை வெட்டுதல் ஆகிய காரியங்களால் இவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது. மேலும் இப்பறவை இனம் பூச்சிகள் பெருக்கத்தைக் கட்டுபடுத்துவதால் உணவுச் சங்கிலியில் முக்கிய இடம் பிடிக்கிறது. பெண் பறவைகளுக்கு மிக குறுகிய சிறகே இருக்கும்.

Leave a Reply