அயிலை மரம்

அயிலை மரம் அதாவது பீயன் (pecan) மரம் போடு
அப்படினா?
இன்னும் தெளிவா சொல்லனுமா தீக்குச்சி மரம்
தீக்குச்சி மரத்தின் (Pecan Tree) சிறப்பு பண்புகள்:
1. கரடு முரடான நிலத்துல கூட வளரரும்,
2. தண்ணீ ஊத்த வேண்டாம்,
3. உரம் போட வேண்டாம்,
4. களை எடுக்க வேண்டாம்.
5. ஆடு, மாடு தின்னாது.
6. மழை இல்லாவிடினும் தாங்கிவளரும் சக்திகொண்டது.
வருடத்திற்கு இருமுறை கோழிக்கழிவு மாதிரியான இயற்கை உரங்களை வைத்தால் வளர்ச்சி வேகமாய் இருக்குமாம். மற்றொரு முக்கியமான பராமரிப்பு இதன் பக்கவாட்டு கிளைகளை வெட்டிவிட வேண்டுமாம். அப்போதுதான் மரம் உயரமாக நெடுநெடுவென வளருமென்கிறார்கள்.
அட சூப்பரு…
ஆறில் இருந்து ஏழு வருடத்திற்குள் பனைமர உயரத்திற்கு வளரும் இந்த மரம் ஒவ்வொன்றும் இரண்டு டன் எடை வரை இருக்கும்…..

நன்கு வளர்ந்த தீக்குச்சி மரங்கள்
சரி இதை எப்படி காசாக்குவது?…அதாவது காசு .. பணம்…துட்டு … துட்டு… !!!
உங்க ஊருக்கு அருகாமையில் இருக்கிற தீப்பெட்டி தொழிற்சாலைகளை தொடர்பு கொண்டு சொன்னாலே போதும்…அவர்களே வந்து மரத்தை வெட்டி எடை போட்டு உங்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். ஒரு டன் மரத்திற்கு ரூ.2000 வரை தருகிறார்கள்.
ஒரு ஏக்கர், 400 மரம், 7 வருடம், 16,00,000 (பதினாரு லட்சம்) வரை வருமானம்
ஆச்சர்யமாய் இருக்குல்லெ…ஆம், தீக்குச்சிகள் தயாரிக்கத்தான் இந்த மரம் பயன்படுகிறது.கேரள விவசாயிகள் இதன் அருமையுணர்ந்திருக்கின்றனர்…இப்போ, தமிழகத்திலும் விழிப்புணர்வு வந்திருக்கிறது.
அதிகரித்து வரும் மரத்தேவைக்காக தற்போது தீப்பெட்டி நிறுவனங்களே விவசாயிகளை இந்த மரத்தினை பயிரிடச்ச்சொல்லி பணம் தருகின்றனராம். குடியாத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு செடியையும் கொடுத்து, லோன்,இன்ஸூரன்சு போன்றவைகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனராம்.

Leave a Reply