அம்மா சாப்பிட

#சொல்வனம்
தேவை
அப்பா சாப்பிட காரம் சேர்க்க வேண்டும்
தாத்தாவுக்கு சிறுதானிய தோசை தேவை
பாட்டி சூடு குறைந்த ரசம் தொட மாட்டாள்
மாமா சாப்பிட ஏதேனுமொரு கீரை வேண்டும்
தம்பி ஆர்கானிக் மட்டுமே தொடுவேன் என்பான்
எண்ணெய் மிதக்காமல் உள்ளிறங்காது எனக்கு
நிஷாக்குட்டி பருப்பு சாதம் மட்டுமே…
அம்மா சாப்பிட
இவையெல்லாம் பழையதாக வேண்டும்.
  – ந.சிவநேசன்

Leave a Reply